ஃபோர்ப்ஸ் டாப் 10 பில்லியனர்கள் பட்டியலில் அம்பானிக்கு இடம் இல்லை!

Published : Apr 03, 2025, 10:09 AM IST

Forbes World’s Billionaires List for 2025: ஃபோர்ப்ஸ் உலக பில்லியனர்கள் பட்டியல் 2025 வெளியானது. இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ஆனால் சொத்து மதிப்பு சற்று குறைந்துள்ளது. முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர், எலான் மஸ்க் உலக அளவில் முதலிடம்.

PREV
15
ஃபோர்ப்ஸ் டாப் 10 பில்லியனர்கள் பட்டியலில் அம்பானிக்கு இடம் இல்லை!
Forbes World’s Billionaires List for 2025

ஃபோர்ப்ஸ் உலக பில்லியனர்கள் பட்டியல் 2025 வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த பில்லியனர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட சற்று அதிகரித்துள்ளது. 200 நபர்களில் இருந்து 205 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் வைத்திருக்கும் சொத்துகளின் நிகர மதிப்பு 2025 இல் 941 பில்லியன் டாலர் ஆகும். இருப்பினும், இது கடந்த ஆண்டை விட ($954 பில்லியன்) குறைவுதான்.

25
Billionaires List for 2025

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தரவுகள், இந்தியாவில் தற்போது 205 பில்லியனர்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. இதில் முகேஷ் அம்பானி 116 பில்லியன் டாலர் சொத்துடன் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகத் தொடர்கிறார். 2025ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ் உலக பில்லியனர்கள் பட்டியலில் மீண்டும் ஒருமுறை எலான் மஸ்க் முன்னிலை பெற்றுள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் 342 பில்லியன் டாலர் சொத்துடன் முதலிடத்தில் இருக்கிறார்.

35
Mukesh Ambani

இரண்டு தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு, அவர்களின் கூட்டு நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததால், 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாகக் வீழ்ச்சி கண்டது. இதனால், அவர்களின் சொத்து மதிப்பும் 13 பில்லியன் டாலர்கள் சரிந்தது.

2025ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் உலகெங்கிலும் இருந்து 3,028 பேர் இடம்பெற்றுள்ளனர். முதல் முறையாக இந்த ஆண்டுதான் பில்லியனர்கள் எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டியுள்ளது. அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 16.1 டிரில்லியன் டாலர்கள் என்ற சாதனையை எட்டியுள்ளது.

45
Elon Musk with Mark Zuckerberg

மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் முதல் முறையாக இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளார். அவரது சொத்துகளின் நிகர மதிப்பு 216 பில்லியன் டாலர்கள். தற்போது மூன்றாவது இடத்தில் உள்ள அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸையும், நான்காவது இடத்தில் உள்ள ஆரக்கிளின் லாரி எலிசனையும் அவர் முந்திவிட்டார்.

55
Indians in Forbes World’s Billionaires List for 2025

ஃபோர்ப்ஸ் பட்டியலில் உள்ள 10 பணக்கார இந்தியர்கள் யார்?

முகேஷ் அம்பானி (நிகர மதிப்பு $92.5 பில்லியன்)
கௌதம் அதானி (நிகர மதிப்பு $56.3 பில்லியன்)
சாவித்ரி ஜிண்டால் & குடும்பத்தினர் (நிகர மதிப்பு $35.5 பில்லியன்)
ஷிவ் நாடார் (நிகர மதிப்பு $34.5 பில்லியன்)
திலீப் ஷாங்வி (நிகர மதிப்பு $24.9 பில்லியன்)
சைரஸ் பூனவல்லா (நிகர மதிப்பு $23.1 பில்லியன்)
குமார் பிர்லா (நிகர மதிப்பு $20.9 பில்லியன்)
லட்சுமி மிட்டல் (நிகர மதிப்பு $19.2 பில்லியன்)
ராதாகிஷன் தமானி (நிகர மதிப்பு $15.4 பில்லியன்)
குஷால் பால் சிங் (நிகர மதிப்பு $14.5 பில்லியன்)

Read more Photos on
click me!

Recommended Stories