Gold Rate Today : குட்நியூஸ்.. தங்கம் வாங்க இன்றே முந்துங்கள்.. சரசரவென குறைந்த விலை..!

First Published May 18, 2023, 10:07 AM IST

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்றும் குறைந்துள்ளது. 

நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.320  குறைந்து ரூ.45,360க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,670க்கு விற்பனையானது.

இன்றைய (மே 18) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160  குறைந்து ரூ.45,200ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,650ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,126ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 49,008ஆக விற்பனையாகிறது.

வெள்ளி நேற்றைய விலையே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.78.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 78,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

click me!