Gold Rate Today : அப்பாடா.. ஒருவழியாக குறைந்தது தங்கம் விலை.. நகை வாங்க இதுதான் சரியான நேரம்..!

First Published May 2, 2023, 10:04 AM IST

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் நிலை அதிகரித்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. 

நேற்றைய நிலவரப்படி, சவரன் ரூ.45,040க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.5.615க்கு விற்பனையானது.

இன்றைய (மே 02) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,920ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5.615ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,066ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,528ஆக விற்பனையாகிறது.

வெள்ளி ஒரு கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 80.500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

click me!