Gold Rate Today : இன்றை தங்கம் விலையின் நிலவரம் என்ன? ஏற்றமா? இறக்கமா?

First Published May 1, 2023, 10:44 AM IST

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் நிலை உயர்ந்து வந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இன்றைய (மே 01) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. 

சவரன் ரூ.45,040ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.5.600ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,097ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,776ஆக விற்பனையாகிறது.

வெள்ளியில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே தொடர்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 80.200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

click me!