குட்நியூஸ்.. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 171 ரூபாய் குறைந்தது.. அப்படினா வீட்டு உபயோக சிலிண்டர் விலை?

Published : May 01, 2023, 07:41 AM ISTUpdated : May 01, 2023, 07:50 AM IST

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.171 குறைந்து ரூ.2,021-க்கு விற்பனையாகிறது.

PREV
14
குட்நியூஸ்.. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 171 ரூபாய் குறைந்தது.. அப்படினா வீட்டு உபயோக சிலிண்டர் விலை?

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

24

பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. 

34

ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், மே மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

44

இதில், வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.117  குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.2,021க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து இரண்டு மாததங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்து வருவதால் ஹோட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories