LPG Price Cut: அதிகாலையிலேயே குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை.. எவ்ளோ தெரியுமா?

Published : Aug 01, 2026, 07:20 AM IST

LPG Price Cut: இந்தியாவில் வணிக சிலிண்டர் விலை இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதியான காலை அதிரடியாக குறைந்துள்ளது. எவ்வளவு விலை குறைந்துள்ளது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

PREV
14
வணிக சிலிண்டர் விலை குறைப்பு

ஆகஸ்ட் 1 ஆம் தேதியான இன்று இந்தியாவில் வணிக சிலிண்டர் விலையில் ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, தற்போது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது வணிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களின் அடிப்படையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் நாளில் இந்த விலை மாற்றத்தை அறிவித்து வருகின்றன.

வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு

அந்த வகையில் இன்று புதிய விலை மாற்றத்தின்படி, 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு உருளையின் (Cylinder) விலை ரூ.200 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இதன் தற்போதைய விற்பனை விலை ரூ.2,906 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த மாதமும் வணிக சிலிண்டர் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டு, சென்னையில் ரூ.3,283-லிருந்து ரூ.3,106 ஆக மாறியது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து, இந்த மாதமும் தொடர்ந்து இரண்டாவது முறையாக விலை குறைக்கப்பட்டிருப்பது சிறு தொழில் புரிவோருக்குப் பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: LPG Gas Cylinder: ஆகஸ்ட் 1 முதல் கேஸ் சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்.! இதோ 6 புதிய அப்டேட்ஸ்.!

24
விலை குறைப்பிற்கான காரணம் என்ன?

மேற்கு ஆசிய நாடுகளில் நிலவிய போர் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, இந்த ஆண்டில் பல மாதங்கள் வணிக சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்தது. கிட்டத்தட்ட இரட்டிப்பாகி, உச்சகட்டமாக ரூ.3,283 வரை சென்று வர்த்தகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது சர்வதேச அளவில் நிலவிய பதற்றமான சூழல் சற்று தணிந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகி வருகிறது. இதன் காரணமாகவே எண்ணெய் நிறுவனங்கள் இந்த ஆண்டின் மிக முக்கிய விலை குறைப்பைச் செயல்படுத்தியுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: E20 Petrol : E20 பெட்ரோலால் இன்ஜின் பாழாகுமா? மைலேஜ் குறையுமா? மத்திய அரசு அதிரடி விளக்கம்!

34
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமா?

அதேவேளையில், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோகச் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது சாமானிய மக்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், பழைய விலையான ரூ.957.50 என்ற அளவிலேயே மாற்றமின்றி நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Gold: கம்மி விலைக்கு தங்கம் கிடைக்கும் டாப் 10 நகரங்கள்.. தமிழ்நாட்டின் 2 இடங்கள் லிஸ்ட்டில்!

44
சிறு வணிகர்ககள் வரவேற்பு

இந்தத் தொடர் விலை குறைப்பு உணவக உரிமையாளர்கள், தேநீர்க்கடைகள், தண்பண்டக் கடைகள், விடுதிகள் மற்றும் வணிக ரீதியாகச் சிலிண்டர்களைப் பயன்படுத்தும் சிறு தொழிலாளர்களுக்குப் பெரும் பொருளாதார நிம்மதியைத் தந்துள்ளது. கடந்த சில மாதங்களாக மூலப்பொருட்களின் விலை உயர்வால் உணவகப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாக உணவக உரிமையாளர்கள் கூறி வந்தனர்.

தற்போது எரிவாயு உருளை விலை கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் குறைக்கப்படுமா அல்லது பழைய விலையே தொடருமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அதேபோல, வரவிருக்கும் மாதங்களிலும் கச்சா எண்ணெய் விலை சரிந்து, எரிவாயு விலை மேலும் குறைய வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories