* உங்களது மொபைலில் 'HP Pay' மற்றும் 'AadhaarFaceRD' ஆகிய செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவும்.
* 'HP Pay' செயலியைத் திறந்து, கேஸ் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டுப் பதிவு செய்யவும்.
* மொபைலுக்கு வரும் ஓடிபி (OTP) மூலம் சரிபார்ப்பை முடிக்கவும்.
* பாதுகாப்பான அணுகலுக்கு 4 இலக்க எம்பிஐஎன் (MPIN) குறியீட்டை உருவாக்கவும்.
* எம்பிஐஎன் மூலம் லாகின் செய்து, லொகேஷன் (Location) அனுமதியை வழங்கவும்.
* 'MY HP' பகுதிக்குச் சென்று 'LPG' என்பதைத் தேர்வு செய்யவும்.
* அங்குள்ள 'e-KYC' ஆப்ஷனைக் கிளிக் செய்து, நிபந்தனைகளைப் படித்து ஒப்புதல் அளிக்கவும்.
* 'Capture Face' என்பதைக் கிளிக் செய்யும்போது, 'AadhaarFaceRD' செயலி இயங்கத் தொடங்கும்.
* திரையில் காட்டும் அறிவுறுத்தல்களின்படி உங்களது முகத்தை ஸ்கேன் செய்து இ-கேஒய்சி செயல்முறையை வெற்றிகரமாக முடிக்கலாம்.
முக்கிய குறிப்பு: மொபைல் செயலி தவிர, வாடிக்கையாளர்கள் தங்களின் கேஸ் விநியோகஸ்தர் (Distributor) அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் மூலமாகவோ இந்த இ-கேஒய்சி சரிபார்ப்பை இலவசமாக செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.