உங்கள் உடைமைகளைப் பாதுகாப்பதற்காக, பாதுகாப்பான லாக்கர்கள் பெரும்பாலும் உடைக்க முடியாத பொருட்களால் செய்யப்படுகிறது. அவை, சாவி மற்றும் டிஜிட்டல் முறையில் பூட்டப்படுகிறது.
லாக்கர் என்றால் என்ன?
ஐடிபிஐ ஃபர்ஸ்ட் பேங்க் இணையதளத்தின்படி, “பாதுகாப்பான வைப்புப் பெட்டி என்பது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் உடமைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வழங்கப்படும் தனிப்பட்ட பெட்டகமாகும். வழக்கமாக, வங்கிகள் இந்த பெட்டகங்களை ஆண்டு அடிப்படையில் வாடகைக்கு விடுகின்றன. இருப்பினும், இது வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து மாறுபடுகிறது.
பாதுகாப்பு வைப்பு பெட்டியில் நகைகள், முக்கிய ஆவணங்கள், மதிப்புமிக்க பொருட்கள் போன்றவைகளை வைத்து எந்த அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாக்கலாம்.
வங்கிகள் லாக்கர்களை வாடகைக்கு விடுகின்றன, அவை உங்கள் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் அத்தியாவசிய ஆவணங்களைப் பாதுகாக்க சிறந்தவை. உங்கள் பாதுகாப்பான வைப்பு லாக்கருக்கு, வங்கிகள் பெரும்பாலும் வருடாந்திர கட்டணத்தை வசூலிக்கின்றன. லாக்கரின் அளவைப் பொறுத்து, அதன் கட்டணம் வேறுபடுகிறது. நியாயமான வாடகைக் கட்டணங்கள் மற்றும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற லாக்கர் அளவுகளைக் கொண்ட வங்கியால் வழங்கப்படும் லாக்கர் வசதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
PNB locker charges
பிஎன்இ வங்கி சிறிய வகை லாக்கர்களுக்கு ரூ.1250+GST முதல் ரூ.2000+GSTயும் சேர்த்து வசூலிக்கிறது. நடுத்தர வகை லாக்கர்களுக்கு ரூ.2500+GST முதல் ரூ.3500+GSTயும் பெரிய அளவிலான லாக்கர்களுக்கு ரூ.3000+GST முதல் ரூ.5500+GSTயும், மிகப் பெரிய அளவிலான லாக்கர்களுக்கு ரூ.6000+GST முதல் 8000+GSTயும் எக்ஸ்ட்ரா லார்ஜ் வகை லாக்கர்களுக்கு ரூ.10000+GST வசூலிக்கிறது.
சில குறிப்பிட்ட வகை மெட்டரோ கிளைகளில் வருடத்திற்கு 12 வருகைகள் இலவசமாக லாக்கரை அணுக அனுமதிக்கிறது. அதன் பிறகான ஒவ்வொரு வருகைக்கும் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்
Canara Bank locker charges
கனரா வங்கி சிறிய வகை லாக்கர்களுக்கு ரூ.1000+GST முதல் ரூ.2000+GSTயும் சேர்த்து வசூலிக்கிறது. நடுத்தர வகை லாக்கர்களுக்கு ரூ.2000+GST முதல் ரூ.3400+GSTயும் பெரிய அளவிலான லாக்கர்களுக்கு ரூ.4000+GST முதல் ரூ.7000+GSTயும், மிகப் பெரிய அளவிலான லாக்கர்களுக்கு ரூ.6000+GST முதல் 10000+GST வசூலிக்கிறது.
கனரா வங்கி லாக்கர் கட்டணங்கள் பொதுவானவை மட்டுமே. இது கிளைக்கு கிளை மாறுபடலாம். மேலும் விவரங்களுக்கு உங்களுக்கான கிளையை பார்வையிடவும்
3600 கோடிக்கு அதிபதி.. பலருக்கு இன்ஸ்பிரேஷனாக மாறிய தமிழகத்தின் பணக்கார பெண் - யார் இந்த ராதா வேம்பு?
HDFC Bank locker charges
ஹெடிஎஃபிசி வங்கி மிகச்சிறிய வகை லாக்கர்களுக்கு ரூ.550+GST முதல் ரூ.1350+GST வரையும் சிறிய வகை லாக்கர்களுக்கு ரூ.850+GST முதல் ரூ.2200+GST வரையும், நடுத்தர வகை லாக்கர்களுக்கு ரூ.1250+GST முதல் ரூ.4000+GSTயும் பெரிய அளவிலான லாக்கர்களுக்கு ரூ.3300+GST முதல் ரூ.20000+GST வரை வசூலிக்கிறது.
இருப்பிடத்தின் அடிப்படையில் வங்கிக் கிளைகளில் உள்ள லாக்கர் கட்டணங்கள் மாறுபடும். மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகில் உள்ள வங்கிக்கிளையை அணுகவும்.
ICICI Bank Bank locker charges
ஐசிஐசிஐ வங்கி சிறிய வகை லாக்கர்களுக்கு ரூ.1200+GST முதல் ரூ.4000+GST வரையும், நடுத்தர வகை லாக்கர்களுக்கு ரூ.2500+GST முதல் ரூ.9000+GSTயும் பெரிய அளவிலான லாக்கர்களுக்கு ரூ.4000+GST முதல் ரூ.22000+GST வரை வசூலிக்கிறது.
ஒரே இடத்தில் உள்ள கிளைகளுக்கு இடையே லாக்கர் வாடகை கட்டணங்கள் மாறுபடலாம். லாக்கரின் அளவு மற்றும் கிளை இருப்பிடத்தின் அடிப்படையில் லாக்கர் வாடகைகள் மாறுபடும்.
லாக்கர் வாடகை ஆண்டுதோறும் வசூலிக்கப்படுகிறது மேலும் முன்கூட்டியே வசூலிக்கப்படுகிறது.