ஒவ்வொருவரும் ஓய்வூதியத்திற்காக முன்கூட்டியே திட்டமிட்டு சேமிக்க வேண்டியது முக்கியம். ஆனால், பணப்பற்றாக்குறையால் பலர் இதைச் செய்ய முடிவதில்லை. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் பணத்தைச் சேமிப்பது கடினமாக உள்ளது.
இந்நிலையில், மக்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். வருமானத்தில் ஒரு பகுதியை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதில் ஒருமுறை முதலீடு செய்வதன் மூலம், பெரிய தொகையை ஓய்வூதியமாகப் பெறலாம்.
எல்ஐசி வழங்கும் இந்தத் திட்டம் எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வழக்கமான வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
இதில் ஒருமுறை மட்டும் ஒரு தொகையை முதலீடு செய்தால் போதும். வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெற உத்தரவாதம் கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் 1 லட்சம் ஓய்வூதியம் பெற முடியும். எல்ஐசியின் இந்தத் திட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி திட்டம் அனைத்து வயதினருக்கும் கிடைக்கிறது. இத்திட்டத்தில் பல பாலிசிகள் உள்ளன. எல்ஐசி இந்தத் திட்டத்திற்கு 30 ஆண்டுகள் முதல் 79 ஆண்டுகள் வரை கால வரம்பு நிர்ணயித்துள்ளது.
இந்தத் திட்டம் உத்தரவாத ஓய்வூதியத்தைத் தவிர வேறு பல பலன்களையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. ஒற்றை மற்றும் கூட்டு வருமானத்தில் விருப்பமானதைத் தேர்வு செய்யலாம்.
பாலி எடுத்த உடனே ஓய்வூதிய வரம்பை நிர்ணயிக்கலாம். ஓய்வு பெற்ற பிறகு நிலையான விகிதத்தில் ஓய்வூதியம் வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, இத்திட்டத்தில் ரூ.11 லட்சம் முதலீடு செய்யும்போது உங்களுக்கு 55 வயது இருந்தால், முதலீடு ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
60 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, ஆண்டுக்கு ரூ.1,02,850 ஓய்வூதியம் கிடைக்கும். இந்தத் தொகையை 6 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது மாதம் தோறும் எடுத்துக் கொள்ளலாம்.
ரூ.11 லட்சம் முதலீட்டில், ஆண்டு ஓய்வூதியம் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருக்கும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இந்தத் தொகையை எடுக்க விரும்பினால் ரூ.50,365 கிடைக்கும். மாதம் தோறும் எடுத்துக்கொண்டால், ரூ.8217 பென்ஷனாகக் கிடைக்கும்.
இந்த எல்ஐசி பாலிசியில்.. உத்தரவாதமான ஓய்வூதியத்துடன் மற்ற சலுகைகளும் உள்ளன. பாலிசிதாரர் பாலிசி காலத்தின் போது இறந்தால், அவரது கணக்கில் உள்ள தொகை நாமினிக்கு செலுத்தப்படும்.
பாலிசிதாரர் 11 லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால், நாமினிக்கு 12,10,000 ரூபாய் வழங்கப்படும். எல்ஐசியின் ஜீவன் சாந்தி திட்டத்தில் குறைந்தது ரூ.1.5 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். எந்த நேரத்திலும் இந்தத் திட்டம் நிறுத்தப்படலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.