சந்தையில் செண்டிமெண்ட் தேவையா? முதலீட்டாளர்களுக்கு வாரென் பஃபெட் கூறும் சக்சஸ் டிப்ஸ்!

First Published | Sep 28, 2024, 9:44 AM IST

வர்த்தகத்தில் வாரன் பஃபெட்டின் திறமையான அணுகுமுறைக்கு சந்தேகமே இல்லை. அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியுள்ள முக்கியமான 5 வர்த்தக பாடங்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Warren Buffett Financial Lessons

வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே, அதன் பங்குகள் 0.8% உயர்ந்ததால், சந்தை மூலதனத்தில் 1 டிரில்லியன் டாலரைத் தாண்டிய முதல் தொழில்நுட்பம் சாராத அமெரிக்க நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

Warren Buffett and Berkshire Hathaway

வர்த்தகத்தில் வாரன் பஃபெட்டின் திறமையான அணுகுமுறைக்கு அடையாளமாக பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் சந்தை மூலதனத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் வாரன் பஃபெட் மூலம் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான 5 வர்த்தக பாடங்களைப் பார்க்கலாம்.

Tap to resize

Strong economic moat

வாரன் பஃபெட் வலுவான பொருளாதாரம் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்வதை வலியுறுத்துகிறார். ஒருபோதும் விற்க விரும்பாத வணிகங்களில் பங்குகளை வாங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். அப்படிப்பட்ட நிறுவனங்கள் தான் மோசமான நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் செழித்து வளரும்.

Follow fundamental rules

முதலீடு செய்வது பலரும் நினைத்துக்கொண்டிருப்பதை விட எளிமையானது என்று பஃபெட் கருதுகிறார். முதலீட்டாளர்கள் அடிப்படை விதிகளைப் பின்பற்றினால் போதும். சந்தையில் வெற்றி பெறுவதற்கு மிகைப்படுத்திய செயல்முறைகளைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

Critically evaluate investments

முதலீட்டாளர்கள் சரியான கேள்விகளைக் கேட்டு, உரிய நேரத்தில் முதலீடு தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும் என்கிறார்ழ. முதலீடு சார்ந்த முடிவுகளை விமர்சன ரீதியாக மதிப்பிட வேண்டும் என்றும் இது முதலீட்டுக்கு சரியான தேர்வுகளைச் செய்ய உதவுகிறது என்றும் அறிவுறுத்துகிறார்.

Ignore the market noise

சந்தை விலைகள் பெரும்பாலும் உண்மையான மதிப்பைப் பிரதிபலிக்காது. இந்தத் தத்துவத்தைப் பின்பற்றி, சந்தை இரைச்சலைப் புறக்கணித்து, முதலீட்டில் முழுமையான கவனம் செலுத்துவது முக்கியம் என்று பஃபெட் பரிந்துரைக்கிறார்.

Contrarian approach

முதலீட்டில் பொதுவான சென்டிமெண்டுகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதன் முக்கியத்துவத்தையும் பஃபெட் வலியுறுத்துகிறார். மற்றவர்கள் தயங்கும்போது, நீங்கள் துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும். மற்றவர்கள் தீவிரமாக முதலீடுகளில் ஈடுபடும்போது, நீங்கள் யோசித்து முடிவு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.

Latest Videos

click me!