EPFO எனப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அதன் உறுப்பினர்களுக்கு பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் வழங்குகிறது. ஓய்வூதியத் தொகை பணிபுரியும் நிறுவனம் மற்றும் பணியாளரின் பங்களிப்பைப் பொறுத்து மாறுபடுகிறது.
வழக்கமாக, இந்த ஓய்வூதியம் 58 வயதில் ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கிறது. ஆனால், சில நிபந்தனைகளின் கீழ் முன்கூட்டியே ஓய்வூதியம் பெறவும் விண்ணப்பிக்க முடியும். ஆனால், ஓய்வூதியம் பெற EPFO கணக்கு வைத்திருக்கும் உறுப்பினர் குறைந்தது 10 வருடங்கள் EPF கணக்கில் பங்களிக்க வேண்டும்.
EPF கணக்கில் இருந்து அதிகபட்ச பென்ஷன் பெற, ஓய்வூதியத்தை 58 வயதுக்கு பதிலாக 60 வயது வரை வைத்திருக்க வேண்டும். இப்படிச் செய்தால் காத்திருக்கும் 2 ஆண்டுகளுக்கு தலா 4 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்.
ஒரு ஊழியர் 59 வயதில் ஓய்வூதியம் பெற முடிவு செய்தால், அவருக்கு 4 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 60 வயதில் பென்ஷன் பெற முடிவெடுத்தால், 8 சதவீதம் அதிகமாக ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது. பணியாளரின் சேவை காலம், 58 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பெறும் ஆண்டுச் சம்பளம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு ஓய்வூதியம் வழங்கப்படும்.
EPFO fixes 8.15% interest rate on employees’ provident fund for 2022-23
தொழிலாளரின் வயது 50 முதல் 58 வயது வரை இருந்தால் மட்டுமே முன்கூட்டியே ஓய்வூதியம் பெற முடியும். ஆனால் முன்கூட்டியே பென்ஷன் பெற முடிவு செய்தால், குறைவான தொகைதான் கிடைக்கும். 58 வயதிற்கு முன் EPS கணக்கில் உள்ள பணத்தை எடுத்தால், ஓய்வூதியம் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் குறைக்கப்படும்.
EPFO Higher Pension
EPFO உறுப்பினர் 56 வயதில் குறைந்த மாதாந்திர ஓய்வூதியம் போதும் என்று முடிவு எடுத்தால், அவருக்கு அடிப்படை ஓய்வூதியத் தொகையில் 92 சதவீதம் (100% - 2×4) மட்டுமே கிடைக்கும். அதாவது, 2 ஆண்டுகளுக்கு தலா 4% வீதம் மொத்தம் 8% குறைக்கப்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும். இவ்வாறு முன்கூட்டியே ஓய்வூதியத்தைப் பெற, தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு 10D படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
EPFO- Is there scope to increase PPF rates in future, Know why PPF interest rate remains unchanged
10 வருடம் EPFO கணக்கில் பங்களிப்பு செய்த 50 வயதுக்குக் குறைவான தொழிலாளராக இருந்தால், ஓய்வூதியத்தைக் கோர முடியாது. அத்தகைய சூழ்நிலையில், வேலையை விட்டு வெளியேறிய பிறகு, EPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை மட்டுமே பெற முடியும். இந்தத் தொகை 58 வயது முதல் கிடைக்கும்.
EPFO Gives Subscribers A Reason To Smile- Higher Pension Date Extended, Check Online Apply Process Now
10 ஆண்டுகளுக்கு குறைவாக EPFO கணக்கில் பங்களித்தவராக இருந்தால், இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. இனி வேலையைச் செய்ய விரும்பவில்லை என்று முடிவு எடுத்திருந்தால், PF தொகையுடன் ஓய்வூதியத் தொகையையும் திரும்பப் பெறலாம்.
ஒருவேளை, எதிர்காலத்தில் மீண்டும் வேலையில் சேரலாம் என்று நினைத்தால், பென்ஷன் திட்டச் சான்றிதழை எடுத்துக் கொள்ளலாம். மீண்டும் எப்போது புதிய வேலையில் சேர்ந்தாலும், அந்தச் சான்றிதழ் மூலம் முந்தைய ஓய்வூதியக் கணக்கை புதிய வேலையுடன் இணைக்கலாம். இதன் மூலம், 10 வருட பங்களிப்பை புதிய வேலை மூலம் ஈடு செய்து, 58 வயதிலிருந்து ஓய்வூதியம் பெறலாம்.