மனை அமைந்துள்ள லே-அவுட் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) அல்லது நகர ஊரமைப்பு இயக்குநரகம் (DTCP) அங்கீகாரம் பெற்றதா எனச் சரிபார்க்கவும்.“அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்துள்ளோம்” என்று கூறும் புரொமோட்டர்களை நம்ப வேண்டாம். அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்குவது ஆபத்தை விளைவிக்கும்.மனை முன்பு விவசாய நிலமாக இருந்திருந்தால், அதற்கு லே-அவுட் அமைப்பதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என உறுதி செய்யவும்.
பணம் செலுத்தும் முறையை கவனிக்கவும்
மாதத் தவணைகளை வங்கிக் கணக்கு அல்லது காசோலை மூலம் செலுத்துங்கள். பணமாகக் கட்டுவதைத் தவிர்க்கவும்.ஒவ்வொரு தவணைக்கும் ரசீதைப் பெற்று பத்திரமாக வைத்திருங்கள்.தவணைக் காலம் முடிவதற்கு முன்பே லே-அவுட் தயாராக இருந்தால், முன்கூட்டியே தவணைகளை செலுத்தி பத்திரப் பதிவை முடிக்கவும்.
போலி சலுகைகளில் ஏமாற வேண்டாம்
இலவச பத்திரப் பதிவு, இலவச பட்டா, சிறப்புப் பரிசுகள், சுற்றுலா சலுகைகள் போன்றவை உண்மையாக இருக்க வாய்ப்பு குறைவு. இவற்றை மட்டும் நம்பி முடிவெடுக்காதீர்கள்.மனையின் உண்மையான மதிப்பு, பகுதியின் வளர்ச்சி வாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மட்டுமே கருத்தில் கொள்ளுங்கள்.