கடந்த ஒருவார காலமாக அதிகரித்து வந்த தங்கம் வெள்ளி விலை சரிவடைந்துள்ளதால் திருமண ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் விலை குறைந்துள்ளதால் பலரும் நடை கடைகள் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
கடந்த ஒருவார காலமாக அதிகரித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவடைந்துள்ளதால் திருமண ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் விலை குறைந்துள்ளதால் பலரும் நடை கடைகள் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
23
தங்கம் விலை அதிரடி சரிவு
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 1,000 ரூபாய் குறைந்து 74,040 ரூபாயாக உள்ளது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 128 ரூபாயாக உள்ளது.
33
பங்குச்சந்தையில் முதலீடு
சர்வதேச சந்தையில் தங்கம் தேவை குறைந்தது, மற்றும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியது உள்ளிட்ட காரணங்களே தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய காரணமாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.