சாதனை படைத்த UPI payment.! இந்தியாவை திரும்பி பார்க்கும் சர்வதேச நாடுகள்! டிஜிட்டெல் இந்தியா ராக்ஸ்!

Published : Jul 23, 2025, 01:38 PM IST

இந்தியாவின் UPI பரிவர்த்தனை முறை, வெறும் 9 ஆண்டுகளில் உலகளவில் பயன்படுத்தப்படும் VISA-வின் தினசரி பரிவர்த்தனை அளவைத் தாண்டியுள்ளது. மொபைல் மூலம் எளிதாக பணப் பரிவர்த்தனை செய்யும் இந்த முறை, இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு சான்றாக அமைந்துள்ளது. 

PREV
15
ஈசியான பண பரிவர்த்தனை

இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைத் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியதே UPI (Unified Payments Interface). 2016ஆம் ஆண்டு NPCI (National Payments Corporation of India) மூலமாக அறிமுகமான இந்த முறையானது, வெறும் 9 ஆண்டுகளில் உலகளவில் பயன்படுத்தப்படும் VISA-வின் தினசரி பரிவர்த்தனை அளவைத் தாண்டியுள்ளது என்பது இந்தியாவின் பெரும் சாதனை.

25
UPI என்றால் என்ன?

UPI என்பது வங்கிக் கணக்குகளை நேரடியாக மொபைல் மூலம் இணைத்து, பாதுகாப்பாகவும் எளிதாகவும் பணப் பரிவர்த்தனை செய்யும் ஒரு முறை. இதில் பங்கு கொண்ட வங்கிகள், பீம் (BHIM), Paytm, Google Pay, PhonePe போன்ற பல பயன்பாடுகள் மூலம் இந்த பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.

 

35
9 ஆண்டுகளில் சாதித்த சாதனை!

2025-இல் வெளியான தகவலின்படி, VISA அந்நாளில் 639 மில்லியன் பரிவர்த்தனைகளை (5517 கோடி ரூபாய் மதிப்பில்) செயல்படுத்தியிருக்கிறது. ஆனால், அதே நாளில் இந்தியாவின் UPI முறையில் 640 மில்லியன் பரிவர்த்தனைகள் (5518 கோடி ரூபாய் மதிப்பில்) நிகழ்ந்துள்ளது. இது உலக அளவில் VISA-வைக் கூட மிஞ்சும் வகையில் இந்தியா வளர்ந்துவிட்டதை நிரூபிக்கிறது

45
இந்த வெற்றியின் பின்னணி
  • இந்தியாவில் உள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் மக்கள் மொபைல் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்தது.
  • நீலகண்ட் பாக்வத் போன்ற நிபுணர்களின் வழிகாட்டுதல்: NPCI, RBI மற்றும் மத்திய அரசு இணைந்து சரியான கட்டமைப்பை உருவாக்கியது.
  • மத்திய அரசின் ஆதரவு: ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் அரசு முறையான ஊக்குவிப்புகளை வழங்கியது.
  • வங்கிகள் மற்றும் பில்லிங் சேவைகளின் இணைப்பு: பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் முழுமையாக இந்த முறையை ஏற்றுக்கொண்டன.
55
உலக நாடுகளும் இந்திய UPI-யை நோக்கி

சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், மொரீஷியஸ் உள்ளிட்ட பல நாடுகள் இந்திய UPI-யை தங்களது நாட்டில் பயன்படுத்த திட்டமிட்டு வருகின்றன. இது இந்திய டெக்னாலஜியின் காந்தத் தன்மையை வெளிக்காட்டுகிறது. இந்தியாவின் UPI, வெறும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையாக அல்ல; அது நாடு வளர்ச்சியின் ஒரு சின்னமாகவும் மாற்றமடைந்துள்ளது. ஒரு காலத்தில் நாம் VISA மற்றும் Mastercard போன்ற நிறுவனங்களை நம்பி இருந்தோம். இன்று உலகமே இந்தியாவின் UPI-யை பின்பற்றும் நிலைக்கு வந்துள்ளது. இது நம்மை நம் நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் நம்பிக்கை கொள்ள வைக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories