விதிகளை மீறிய ஜியோ.. ஏப்ரல் 14 வரைக்கும் தான் டைம்.. டிராய் கடும் எச்சரிக்கை

Published : Apr 05, 2026, 03:03 PM IST

ரிலையன்ஸ் ஜியோவின் சில ரீசார்ஜ் திட்டங்கள் வெளிப்படைத்தன்மை இல்லாமல், ஒருதலைபட்சமாக இருப்பதாக டிராய் கூறியுள்ளது. அதனால், எல்லா பிளான்களையும் எல்லா தளங்களிலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என டிராய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

PREV
16

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவுக்கு, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜியோவின் சில ரீசார்ஜ் திட்டங்கள் 'ஒருதலைபட்சமாக' இருப்பதாகவும், வெளிப்படைத்தன்மை விதிகளை மீறுவதாகவும் டிராய் கூறியுள்ளது. ஏப்ரல் 14-க்குள் இவற்றை சரிசெய்ய வேண்டும் என கெடு விதித்துள்ளது. முக்கியமாக இரண்டு விஷயங்களில் ஜியோ விதிகளை மீறியுள்ளதாக டிராய் சுட்டிக்காட்டியுள்ளது.

26

ஜியோ சில மலிவு விலை பிளான்களை குறிப்பிட்ட சில தளங்களில் மட்டுமே வழங்குகிறது. உதாரணமாக, ரூ.249 மற்றும் ரூ.199 பிளான்கள் 'ஜியோ ஸ்டோர்களில்' மட்டுமே கிடைக்கின்றன. அதேபோல, ரூ.209 பிளான் 'MyJio' ஆப்பில் மட்டுமே உள்ளது. இது வாடிக்கையாளர்களைக் குழப்புவதோடு, விதிமீறல் என்றும் டிராய் கூறியுள்ளது.

36

ஜியோ நிறுவனம், ஜியோ போன் மற்றும் ஜியோ பாரத் போன்களுக்கு என தனியாக மலிவு விலை பிளான்களை வழங்குகிறது. இந்த பிளான்கள் மற்ற ஸ்மார்ட்போன் பயனர்களுக்குக் கிடைப்பதில்லை. இதை 'ஒருதலைபட்சமானது' என டிராய் குறிப்பிட்டுள்ளது. எல்லா மொபைல்களுக்கும் பிளான்கள் சமமாக கிடைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

46
சுமார் 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட ஜியோ, தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளது. 'எங்கள் பிளான்கள் குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவை மையமாகக் கொண்டவை. அதனால் இதை ஒருதலைபட்சம் என கூறமுடியாது. மேலும், போஸ்ட்பெய்ட் மற்றும் முதல் முறை ரீசார்ஜ்களை ஆன்லைனில் விற்க முடியாது' என ஜியோ வாதிட்டது. ஆனால், TRAI இந்த வாதத்தை நிராகரித்துவிட்டது. பிளான்களை அறிவிப்பதும், அவை கிடைப்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
56
அனைத்து ரீசார்ஜ் பிளான்களையும் ரீடெய்ல் ஸ்டோர்கள், வெப்சைட், ஆப் மற்றும் கஸ்டமர் கேர் என எல்லா தளங்களிலும் ஒரே நேரத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும். ஜியோ போன் போன்ற குறிப்பிட்ட மொபைல்களுக்கான சிறப்பு பிளான்களை, அனைத்து மொபைல் பயனர்களுக்கும் கிடைக்கும்படி மாற்றியமைக்க வேண்டும்.
66

ஏப்ரல் 14-க்குள் ஜியோ இந்த மாற்றங்களைச் செய்யவில்லை என்றால், TRAI சட்டம் 1997-ன் கீழ் கடும் அபராதம் விதிக்கப்படும். முதல் முறை விதிமீறலுக்கு ரூ.1 லட்சம் அபராதம். அதன்பிறகு ஒவ்வொரு மீறலுக்கும் ரூ.2 லட்சம் அபராதம். விதிகளைப் பின்பற்றும் வரை, ஒவ்வொரு நாளும் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories