பாஸ்டேக் பாஸ் இந்த சாலைகளில் செல்லாது.. முழு பட்டியல் இதோ.!

Published : Apr 04, 2026, 01:35 PM IST

இந்த பாஸ்டேக் ஆண்டு பாஸ் எல்லா நெடுஞ்சாலைகளிலும் வேலை செய்யாது. சில முக்கிய எக்ஸ்பிரஸ் வேக்களில் இது செல்லாது. இதனை மக்களும், வாகன ஓட்டிகளும் தெரிந்து கொள்வது அவசியம்.

PREV
15
பாஸ்டேக் செல்லாத சாலைகள்

இந்தியாவில் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு சுங்கச்சாவடி கட்டண சுமையை குறைக்க பாஸ்டேக் ஆண்டு பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ.3,075 கட்டணத்தில் இந்த பாஸ், ஒரு வருடத்திற்கு செல்லுபடியாக இருந்தால் அதிகபட்சம் 200 பயணங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு டோல் பிளாசாவையும் கடக்கும்போது, அது ஒரு பயணமாக கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

25
தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

இந்த ஆண்டு பாஸ் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் செயல்படும் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இது அனைத்து சாலைகளுக்கும் பொருந்தாது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பராமரிக்கும் சாலைகளில் மட்டுமே இந்த பாஸ்டேக் பாஸ் செல்லுபடியாகும். மாநில அரசுகள் நிர்வகிக்கும் எக்ஸ்பிரஸ் வேலைகளில் இந்த சலுகை கிடையாது. அங்கு வழக்கம்போல் தனியாக டோல் கட்டணம் செலுத்த வேண்டும்.

35
பாஸ் செல்லாத இடங்கள்

பாஸ்டேக் ஆண்டு பாஸ் செல்லாத இடங்களில் உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா-லக்னோ, பூர்வாஞ்சல், புண்டேல்கண்ட், யமுனா மற்றும் கங்கை எக்ஸ்பிரஸ் வேக்கள் அடங்கும். மகாராஷ்டிராவின் மும்பை-நாக்பூர், மும்பை-பூனே எக்ஸ்பிரஸ்வேக்களிலும் இது பொருந்தாது. மேலும், ஹரியானாவின் டிரான்ஸ்-ஹரியானா எக்ஸ்பிரஸ் வே மற்றும் கர்நாடகாவின் பெங்களூரு-மைசூர் எக்ஸ்பிரஸ் வே ஆகிய சாலைகளிலும் இந்த பாஸ் செல்லாது.

45
எக்ஸ்பிரஸ் வே பட்டியல்

ஆனால், NHAI பராமரிக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய எக்ஸ்பிரஸ் வேக்களில் இந்த பாஸ் பெரும் பயனளிக்கும். டெல்லி-கொல்கத்தா (NH-19), ஆக்ரா-மும்பை (NH-3), வடக்கு-தெற்கு காரிடார் (NH-48), போர்பந்தர்-சில்சார் (NH-27), ஸ்ரீநகர்-கன்னியாகுமரி (NH-44) போன்ற சாலைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. மேலும், டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் வே, டெல்லி-மீரட் மற்றும் அகமதாபாத்-வடோதரா எக்ஸ்பிரஸ் வேகங்களிலும் இந்த சலுகை கிடைக்கும்.

55
எக்ஸ்பிரஸ் வேக்கள்

இந்த பாஸ் அறிமுகமான சில நாட்களிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களில் அதிக அளவில் வாங்கப்பட்டுள்ளது. அடிக்கடி நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்களுக்கு இது மிகவும் சுலபத்தையும் செலவுக் குறைப்பையும் தருகிறது. எனவே, இந்த பாஸை வாங்குவதற்கு முன் நீங்கள் பயணம் செய்யும் சாலைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை சரிபார்ப்பது மிகவும் அவசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories