ஒரு நாளைக்கு ரூ.5 மட்டுமே.. 1 வருடத்துக்கு கவலை இல்லை.. இந்த ஜியோ ரீசார்ஜ் பிளான் போதும்

Published : Sep 16, 2025, 01:56 PM IST

Jio recharge plans : ஜியோ இரண்டு புதிய வாய்ஸ்-ஒன்லி ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் டேட்டா தேவைப்படாத பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகின்றன.

PREV
15
மொபைல் போன் சூப்பர் ரீசார்ஜ் திட்டம்

நாள் தோறும் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பெரும்பாலனவர்களுக்கு மோபைல் கட்டணமாக பல மடங்கு செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. குறிப்பாக டேட்டாக்கள் பயன்படுத்தாவிட்டாலும் அதற்கும் கட்டணம் கட்டும் நிலை உள்ளது. இந்த நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சில நாட்களுக்கு முன்பு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் சிறப்பு உத்தரவுகளை வழங்கியது.

அதில்  டேட்டா பயன்படுத்தாத, அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் தேவைப்படும் பயனர்களுக்காக குறைவான ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டு வர அறிவுறுத்தியது. இந்தச் சூழலில், ஜியோ இரண்டு புதிய வாய்ஸ்-ஒன்லி ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது.

25
டேட்டா தேவைப்படாதவர்களுக்கு சூப்பர் சான்ஸ்

ஜியோவின் புதிய திட்டங்கள் குறிப்பாக டேட்டா தேவைப்படாதவர்களுக்கு சூப்பர் சான்ஸ் அமைத்துக்கொடுத்துள்ளது. அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே அதிகம் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த புதிய அறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும். மேலும், நீண்ட கால வேலிடிட்டி இருப்பதால், பயனர்கள் மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.

35
ஒரு நாளைக்கு சுமார் ரூ.5 மட்டுமே
  • இந்த புதிய திட்டத்தில் பயனர்கள் 84 நாட்களுக்கு சேவைகளைப் பெறலாம்.
  • அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும்.
  •  1000 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
  •  கூடுதலாக, ஜியோ சினிமா, ஜியோ டிவி போன்ற செயலிகளுக்கான இலவச அணுகல் கிடைக்கும்.
  •  இந்த திட்டத்தில் மொத்தம் 365 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு சுமார் ரூ.5 மட்டுமே செலவாகும்.
  •  நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
45
ஆண்டு முழுவதும் ஒரே ரீசார்ஜ்
  •  3600 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
  •  இலவச நேஷனல் ரோமிங்கும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  •  ஜியோ சினிமா, ஜியோ டிவி செயலிகளுக்கான இலவச அணுகலும் உண்டு. ஆண்டு முழுவதும் ஒரே ரீசார்ஜ் செய்ய விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. 
55
குழந்தைகள், முதியோர் சூப்பர் வாய்ப்பு

குழந்தைகள், முதியோர் ஆகியோர்களுக்கு டேட்டா பயன்பாடு குறைவாக இருந்து, அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்-க்கு மட்டும் போன் பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இணையப் பயன்பாடு தேவைப்படாதவர்களுக்கு இவை மலிவாகவும் வசதியாகவும் இருக்கும். சிம்மை ஆக்டிவாக வைத்திருக்க விரும்புவோருக்கும் இது ஒரு சிறந்த தேர்வாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories