வோடபோன், மாருதி, அதானி.! இன்று பார்க்க வேண்டிய பங்குகள் லிஸ்ட் இதோ.!

Published : Sep 16, 2025, 12:22 PM IST

என்டிபிசி, விப்ரோ, ஜைடஸ் லைஃப்சயின்சஸ், மற்றும் ஓலா எலக்ட்ரிக் போன்ற நிறுவனங்களின் முக்கிய அறிவிப்புகளும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.

PREV
15
இன்று பார்க்க வேண்டிய பங்குகள்

இன்றைய வர்த்தக நாளில் சில பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பு உள்ளது. முதலில், வோடபோன் ஐடியா மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. தொலைத்தொடர்பு துறை கோரிய ரூ.9,450 கோடி கூடுதல் தொகை தொடர்பான மனு இன்று விசாரிக்கப்பட உள்ளது.

25
மாருதி சுசுகி

மாருதி சுசுகி தனது புதிய கார் மாடலான “விக்டோரிஸ்”-ன் ஆரம்ப விலையை அறிவித்துள்ளது. இந்த கார் ரூ.10 லட்சம் முதல் கிடைக்கும். இதனால் நடுத்தர வர்க்க மக்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

35
என்டிபிசி கிரீன் எனர்ஜி

என்டிபிசி கிரீன் எனர்ஜி குஜராத்தில் 25 மெகாவாட் சூரிய மின் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் நிறுவனம் மொத்தம் 7,272 மெகாவாட் திறனை அடைந்துள்ளது. மேலும் அதானி எண்டர்பிரைசஸ், கேதர்நாத் - சோன்பிரயாக் இடையே 12.9 கி.மீ நீள ரோப் திட்டத்துக்கான ரூ.4,081 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது.

45
விப்ரோ

ஐடி துறையில் விப்ரோ தனது பாதுகாப்பு சேவைகளை வலுப்படுத்த புதிய ஒத்துழைப்பை கிரவுட்ஸ்டிரைக்குடன் விரிவுபடுத்தியுள்ளது. ஜைடஸ் லைஃப்சயின்சஸ், அமெரிக்காவில் விலங்குகளுக்கான FDA அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

55
சங்கவி மோட்டார்ஸ்

சங்கவி மோட்டார்ஸ் ரூ.292 கோடி ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. அதேசமயம், ஓலா எலக்ட்ரிக் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் சுமார் ரூ.400 கோடி ஊக்கத்தொகை பெற விண்ணப்பித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories