ஏப்ரலில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் ரீபண்ட் எப்போது கிடைக்கும்?

Published : Apr 15, 2025, 12:52 PM IST

புதிய நிதியாண்டில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய படிவம் 16 கட்டாயமில்லை. மாதாந்திர சம்பள ரசீதுகள், படிவம் 26AS, வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) இருந்தால் போதும். பணத்தைத் திரும்பப் பெறுவது, விவரங்களின் துல்லியத்தன்மையைப் பொறுத்தது.

PREV
15
ஏப்ரலில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் ரீபண்ட் எப்போது கிடைக்கும்?
TR Filing AY2025-26 tax refund

வருமான வரி கணக்கு (ITR) தாக்கல்:

புதிய நிதியாண்டு தொடங்கிவிட்டது. இப்போது வரி செலுத்துவோர் 2025-26 நிதி ஆண்டிற்கான வருமான வரி கணக்கை (ITR) எப்போது தாக்கல் செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருப்பார்கள். முதலில் வருமான வரித்துறை நடப்பு ஆண்டிற்கான படிவங்களை அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏழு வெவ்வேறு ஐடிஆர் படிவங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி இந்த ஆண்டும் தேவையான படிவங்கள் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25
TR Filing AY2025-26 tax refund

படிவம் 16 கட்டாயமில்லை:

பெரும்பாலான சம்பளம் பெறும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து வருமான வரி தாக்கலுக்கான படிவம் 16 ஐ வெளியிடும் வரை காத்திருக்கிறார்கள். ஆனால், ITR தாக்கல் செய்வதற்கு படிவம் 16 கட்டாயமில்லை. வரி செலுத்துவோர் அதற்குப் பதிலாக பல்வேறு முக்கிய ஆவணங்களைப் பயன்படுத்தலாம்.

35
TR Filing AY2025-26 tax refund

மாற்று ஆவணங்கள்:

படிவம் 16 குறிப்பிட்ட நிதியாண்டில் ஓர் ஊழியருக்குச் செலுத்தப்பட்ட சம்பளம் மற்றும் TDS விவரங்களைக் குறிப்பிடுகிறது. இது வருமான வரி தாக்கல் செயல்முறையை பெரிதும் எளிதாக்கிவிடும். இருந்தாலும், வருமான வரி தாக்கல் செய்வதற்கு அது கட்டாயமில்லை.  மாதாந்திர சம்பள ரசீதுகள், படிவம் 26AS, வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) மற்றும் வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம் (TIS) போன்ற பொருத்தமான ஆவணங்கள் இருந்தால், படிவம் 16 இல்லாமலே வருமான வரி தாக்கல் செய்யலாம்.

45
TR Filing AY2025-26 tax refund

7 நாட்களுக்குள் ரீபண்ட்:

இந்த ஆவணங்களைக் கொண்டு ஏப்ரல் மாதத்திலேயே யாராவது வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்தால், 7 நாட்களுக்குள் ரீபண்ட் பணத்தைப் பெற முடியுமா என்ற கேள்வி பலரிடமும் இருக்கும். பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை பல காரணிகளைப் பொறுத்தது. தாக்கல் செய்யப்பட்ட வருமானத்தின் துல்லியத்தன்மை, TDS மற்றும் வருமான விவரங்கள் படிவம் 26AS மற்றும் AIS இல் உள்ளவற்றுடன் பொருந்துகிறதா என பல காரணிகளைப் பார்த்த பிறகுதான் பணத்தை விடுவிப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

55
TR Filing AY2025-26 tax refund

விவரங்களின் துல்லியத்தன்மை:

மேலும், வரி செலுத்துவோரின் வங்கிக் கணக்கு முன்கூட்டியே சரிபார்க்கப்பட்டு, பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மாதச் சம்பளம் பெறும் வரி செலுத்துவோரில் பலர் ஒரு வாரத்திற்குள் பணத்தைத் திரும்பப் பெறலாம் என்றாலும், செயலாக்க நேரம் மாறுபடலாம். ஒவ்வொரு நபரும் தாக்கல் செய்துள்ள விவரங்களின் துல்லியத்தன்மையைப் பொறுத்து காலக்கெடு மாறும்.

Read more Photos on
click me!

Recommended Stories