இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வரம்பை அதிகரித்துள்ளது. இந்த புதிய விதிமுறை அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு பெரும் நன்மையாக அமைகிறது.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ஆன்லைன் டிக்கெட் புக்கிங் பயனாளர்களுக்கு ஒரு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடையாள அட்டை (ஆதார்) இணைக்கப்படாத பயனர் ஐடி வைத்தவர்கள் இப்போது மாதத்திற்கு 12 டிக்கெட் வரை புக் செய்யலாம். ஆதார்-க்கு இணைக்கப்பட்ட பயனர் ஐடிகளுக்கு மேலும் கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
24
ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங்
அவர்கள் மாதத்திற்கு அதிகபட்சம் 24 டிக்கெட் வரை ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். இதற்கு முன்பு ஆதார்-க்கு இணைக்கப்படாத பயனர் ஐடிகள் மாதத்திற்கு 6 டிக்கெட் மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. ஆதார்-க்கு இணைக்கப்பட்டவர்களுக்கு 12 டிக்கெட் வரம்பு இருந்தது. ஆனால், புதிய விதிமுறைப்படி, ஆதார் இணைப்பு இல்லாதவர்களுக்கு டிக்கெட் எண்ணிக்கை இரட்டிப்பு செய்யப்பட்டு 12-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
34
மாதம் 24 டிக்கெட் வரம்பு
அதே நேரத்தில் ஆதார் இணைக்கப்பட்டவர்களுக்கு இந்த சலுகை மேலும் இரட்டிப்பு செய்யப்படுகிறது 24-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் இதற்கான உத்தரவை மத்திய ரயில்வே தகவல் முறைமை மையம் (CRIS) மற்றும் அனைத்து மண்டலங்களின் வணிக மேலாளர்களுக்கு அனுப்பியுள்ளது. மேலும் IRCTC தனது பயனாளர்களுக்கு இந்த புதிய சலுகை பற்றி மின்னஞ்சல், SMS உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைனில் அடிக்கடி டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு இந்த முடிவு பெரிய நன்மையாக இருக்கிறது. குறிப்பாக குடும்ப பயணிகள் மற்றும் அடிக்கடி ரெயிலில் செல்வோருக்கு ஆதார் இணைப்பு கிடைக்கும் இந்த மாதம் 24 டிக்கெட் சலுகை பயண வசதியை எளிமையாக்குகிறது.