தினமும் 333 ரூபாய் சேமித்தால் நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்!

First Published | Nov 27, 2024, 12:35 PM IST

ஒவ்வொரு நாளும் 333 ரூபாய் சேமித்து, போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ.7 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கலாம். இதில் வட்டியாக மட்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும்.

Post Office Schemes

தங்கள் பணத்தை முதலீடு செய்வதில் எச்சரிக்கையாக இருப்பவர்கள், அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சிறு சேமிப்புகளைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமான தேர்வாக இருக்கும். பொதுவாக போஸ்ட ஆபிஸ் சேமிப்புத் திட்டங்கள் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Post office RD

சுகன்யா சம்ரித்தி யோஜனா, கிசான் விகாஸ் பத்ரா, பொது வருங்கால வைப்புநிதி என பல்வேறு திட்டங்கள் உள்ளன. ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் (RD) தபால் அலுவலக தொடர் வைப்புநிதித் திட்டம் உத்தரவாதமான வருமானத்தைக் கொடுக்கிறது.

Tap to resize

Post Office Recurring Deposit

ஒவ்வொரு நாளும் வெறும் 333 ரூபாயை சேமித்து, போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் மாதம் ரூ.10,000 வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் விரைவில் நீங்களும் லட்சாதிபதியாக மாறலாம். 5 ஆண்டுகள் முடிவில் ரூ.7,13,659 சம்பாதிக்கலாம்.

Post office RD Scheme

ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் 6.7% வட்டி விகிதம் தரப்படுகிறது. அதாவது 5 ஆண்டுகள் கழித்து பெறும் முதிர்வுத் தொகையில் வட்டி மூலம் மட்டும் 1,13,659 ரூபாய் கிடைக்கும். முதலீட்டாளர்கள் ஐந்து வருடங்களில் கணிசமான முதிர்வுத் தொகைப் பெற இத்திட்டம் வழிவகுக்கிறது.

Recurring Deposit Investment

இந்தத் திட்டம் முதிர்வடையும்போது, கணக்கை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது. இதேபோல தொடர்ந்து முதலீட்டை நீட்டித்துக்கொள்ளலாம். ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்ச மாதாந்திர முதலீடு வெறும் ரூ. 100 முதல் ஆரம்பிக்கிறது. அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recurring Deposit Benefits

அரசாங்க ஆதரவு பெற்ற போஸ்ட் ஆபீஸ் தொடர் வைப்புத் திட்டம் ரிஸ்க் இல்லாமல் அதிக லாபம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. தினசரி சேர்த்து வைக்கும் 333 ரூபாய் ஐந்து ஆண்டுகளில் கணிசமான தொகையாக மொத்தமாகக் கிடைக்கும். இதில் வட்டி மட்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும்.

Latest Videos

click me!