ரிடையர் ஆன பிறகும் ரூ.10,500 சம்பாதிக்கலாம்! இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் சேருங்க!

First Published | Nov 28, 2024, 9:25 AM IST

ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானம் ஈட்ட விரும்பினால், போஸ்ட் ஆபிஸ் சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம் உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும். இதன் மூலம் மாதம் ரூ.10,500 வரை சம்பாதிக்க முடியும். இத்திட்டத்தில் எப்படி முதலீடு செய்யலாம் என்று தெரிந்துகொள்வோம்.

Post Office Schemes

தபால் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மூத்த குடிமக்களுக்கு உத்தரவாதமான வருமானத்தை அளிக்கிறது. ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தைப் பெற விரும்பினால், இத்திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு முறை முதலீடு செய்த பிறகு, திட்டத்தின் முதிர்வுக் காலம் வரை தொடர்ந்து வருமானம் ஈட்டலாம்.

அதே நேரத்தில் நீங்கள் டெபாசிட் செய்த பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். முதிர்ச்சியடைந்த பிறகு, முதலீடு செய்த பணத்தை மொத்தமாக திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

Senior Citizens Savings Scheme

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஓய்வூதியப் பயன் திட்டமாகும். மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ மொத்தமாக முதலீடு செய்து வரிச் சலுகைகளுடன் வழக்கமான வருமானத்தைப் பெறலாம்.

Tap to resize

Post Office SCSS Interest rate

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Savings Scheme) என்பது தபால் அலுவலகத்தின் அதிக வட்டி செலுத்தும் சேமிப்புத் திட்டமாகும். இத்திட்டத்தில் 8.2 சதவீதம் வருடாந்திர வட்டியைப் பெறலாம். வட்டித் தொகை காலாண்டு அடிப்படையில் வழங்கப்படுகிறது. அரசு ஆதரவு பெற்ற திட்டத்திற்குக் கிடைக்கும் அதிகபட்ச வட்டி இதுதான். இத்திட்டத்தின் கீழ், அருகிலுள்ள எந்த தபால் நிலையத்திலும் சேமிப்பைத் தொடங்கலாம்.

Senior Citizens Scheme

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் (Senior Citizens Savings Scheme) முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஒரு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.30,00,000 வரை முதலீடு செய்யலாம். இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை கிடைக்கும். கணக்கை முன்கூட்டியே மூடும் வசதியும் உள்ளது.

போஸ்ட் ஆபிசில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் (Senior Citizens Savings Scheme) அனுமதிக்கப்படும் அதிகபட்ச முதலீடு ரூ 30 லட்சம். இதற்கு 8.2 சதவீதம் ஆண்டு வட்டி கிடைக்கும். ஆனால், இந்த வட்டி காலாண்டு அடிப்படையில் செலுத்தப்படுகிறது. அதாவது 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ 30,750 வருமான கிடைக்கும். இதன் மூலம் வருடம் தோறும் வட்டி மூலம் ரூ. 1,23,000 சம்பாதிக்கலாம். 5 ஆண்டுகளில் வட்டி மூலம் மட்டும் மொத்தம் ரூ.6,15,000 கிடைக்கும்.

Post Office Senior Citizens Savings Scheme

நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் அல்லது 55-60 வயதுக்குட்பட்ட விருப்ப ஓய்வு பெற்ற ஊழியராக இருந்தால், மூத்த குடிமக்கள் (Senior Citizens) சேமிப்புத் திட்டத்தின் கீழ் கணக்கைத் தொடங்கலாம். இத்திட்டத்தில் தொடங்கும் கணக்கை 5 வருட முதிர்வுக் காலத்திற்கு முன் மூடுவதற்கு அபராதம் உண்டு. இந்த அபராதம் நீங்கள் எவ்வளவு காலம் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும்.

Senior Citizens Savings Scheme Pre-maturity

தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (Post Office Senior Citizens Savings Scheme) கணக்கு தொடங்கி, ஒரு வருடத்திற்கு முன் மூடப்பட்டால், அதுவரை டெபாசிட் செய்த பணத்துக்கு வட்டி செலுத்தப்படாது. அதுவரை செலுத்தப்பட்ட வட்டியும் கழிக்கப்படும். ஒரு வருடம் கழித்து, ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டால், டெபாசிட் தொகையில் 1.5 சதவீதம் கழிக்கப்படும். 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கை மூடினால், அசல் தொகையில் 1 சதவீதம் கழிக்கப்படும்.

Senior Citizens Savings Scheme Benefits

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் (Senior Citizens Savings Scheme) 5 ஆண்டுகள் முதலீட்டை நிறைவு செய்து, முதிர்வு காலத்தில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். அவ்வாறு நீட்டிக்கப்பட்ட கணக்காக இருந்தால், ஒரு வருட நீட்டிப்புக்குப் பிறகு கணக்கை மூடினால் அபராதம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

Latest Videos

click me!