அமேசான், ஸ்விக்கியில் 20% தள்ளுபடி! இந்த ஏடிஎம் கார்டு மட்டும் இருந்தால் போதும்!!

First Published | Nov 27, 2024, 4:11 PM IST

RuPay Platinum debit card: ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு மூலம் அமேசான் (Amazon) மற்றும் ஸ்விக்கியில் (Swiggy) 20% உடனடி தள்ளுபடி (Instant Discount) பெறலாம். ஒவ்வொரு மாதமும் ரூ.100 வரை தள்ளுபடி, வெள்ளிக்கிழமைகளில் மட்டும்.

RuPay Card Benefits

ரீசார்ஜ்கள் மற்றும் பில் பேமெண்ட்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் உங்கள் பணத்தில் 20% வரை சேமிக்கலாம். இந்தத் தள்ளுபடியைப் பெற, உங்கள் வங்கியில் இருந்து டெபிட் கார்டைப் பெற வேண்டும். இந்த டெபிட் கார்டின் பெயர் ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு (RuPay Platinum debit card). பல வங்கிகள் இந்த ஏடிஎம் கார்டை வழங்குகின்றன.

Amazon - RuPay Platinum Debit card

அமேசான் - ரூபே பிளாட்டினம் கார்டு:

ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு (RuPay Platinum Debit Card) வைத்திருப்பவர்கள் அமேசான் செயலி அல்லது இணையதளத்தில் ரீசார்ஜ், பில்களுக்கு பணம் செலுத்தும்போது 20% உடனடி தள்ளுபடியைப் பெறமுடியும். ரூபே பிளாட்டினம் கார்டு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் அமேசானில் இந்தச் சலுகையைப் பெறலாம்.

Tap to resize

RuPay Platinum Debit card Offer

ரூபே பிளாட்டினம் கார்டு தள்ளுபடி நிபந்தனைகள்:

ஒவ்வொரு மாதமும் ஒரு கார்டுக்கு அதிகபட்சமாக 100 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். குறைந்தபட்சம் ரூ.129 மதிப்புள்ள பரிவர்த்தனைக்கு மட்டும்தான் இந்தச் சலுகை பொருந்தும். இந்தச் சலுகையை ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பெற முடியும். உதாரணமாக, நீங்கள் ரூ. 500 பில்லுக்கு ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு (RuPay Platinum Debit Card) மூலம் பணம் செலுத்தினால், 20 சதவீதம் இன்ஸ்ட்ண்ட் தள்ளுபடி மூலம் ரூ.100 சலுகை கிடைக்கும். அதாவது ரூ.500 க்குப் பதிலாக ரூ.400 மட்டுமே செலுத்தினால் போதும்.

RuPay Platinum Debit card Discount

ரூபே பிளாட்டினம் கார்டு சலுகையை பயன்படுத்திக் கொள்வது எப்படி?

மொபைலை ரீசார்ஜ் செய்யவும் பில்களுக்குப் பணம் செலுத்தவும் அமேசான் செயலியில் உள்ள அமேசான் பே சேவையை பயன்படுத்த வேண்டும். அதில் பணம் செலுத்தும்போது, ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு (RuPay Platinum Debit Card) மூலம் பணத்தைச் செலுத்தும் வாய்ப்பைத் தேர்வு செய்ய வேண்டும். அப்போது, பில் தொகையில் 20 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

Swiggy - RuPay Platinum Debit card

ஸ்விக்கி - ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு:

ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு (RuPay Platinum Debit Card) வைத்திருப்பவர்கள் ஸ்விக்கி (Swiggy) மொபைல் ஆப் அல்லது இணையதளத்தில் ஆர்டர் செய்தால் 20 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். இந்தத் தள்ளுபடி ஒவ்வொரு மாதமும் ஒரு கார்டில் அதிகபட்சமாக 100 ரூபாய் வரை கிடைக்கு்ம. குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு ரூ.129 ஆக இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும்தான் இந்தச் சலுகையைப் பெறலாம்.

RuPay Platinum Debit card Insurance

ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டில் கூடுதல் பலன்கள்:

ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு (RuPay Platinum Debit Card) மூலம் தனிநபர் விபத்துக் காப்பீடு மற்றும் நிரந்தர ஊனமுற்றோர் காப்பீடு ரூ.2 லட்சம் வரை கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஓய்வறை இலவசமாக ஓய்வறையைப் பயன்படுத்த முடியும்.

Latest Videos

click me!