செப் 30 க்குள் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுக்கும் திட்டங்கள்! இதை மிஸ் பண்ணாதீங்க!

Published : Sep 05, 2024, 10:08 AM IST

வங்கிகள் டெபாசிட்களை உயர்த்த புதிய வழியில் சிந்திக்க வேண்டும் என்று மத்திய நிதித்துறை கூறியதை அடுத்து, பல பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் குறிப்பிட்ட காலத்திற்கு அதிக வட்டியுடன் கூடிய சிறப்பு பிக்ஸட் டெபாசிட் திட்டங்களை அறிவித்துள்ளன.

PREV
15
செப் 30 க்குள் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுக்கும் திட்டங்கள்! இதை மிஸ் பண்ணாதீங்க!
Special FD interest rates for September

வங்கிகள் டெபாசிட்களை உயர்த்த புதிய வழியில் சிந்திக்க வேண்டும் என்று மத்திய நிதித்துறை கூறியதை அடுத்து, பல பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் குறிப்பிட்ட காலத்திற்கு அதிக வட்டியுடன் கூடிய சிறப்பு பிக்ஸட் டெபாசிட் திட்டங்களை அறிவித்துள்ளன.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, ஐடிபிஐ மற்றும் பஞ்சாப் சிந்த் வங்கி ஆகியவை இந்தச் சிறப்புத் திட்டங்களை வழங்குகின்றன. இவற்றில் முதலீடு செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30, 2024. இந்தத் திட்டம் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் உரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

25
SBI FD interest rates

எஸ்பிஐ விகேர்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வீகேர் திட்டத்தை செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. இது புதிய FDகள் மற்றும் முதிர்வு வைப்புகளை புதுப்பிப்பதற்கு பொருந்தும். அதிகாரப்பூர்வ விவரங்களின்படி, வாடிக்கையாளர்கள் பொது மக்களுக்கான கார்டு விகிதத்தை விட 50 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) கூடுதல் பிரீமியத்தைப் பெறலாம் (தற்போதுள்ள 50 பிபிஎஸ் பிரீமியத்திற்கு மேல்) இது கார்டு விகிதத்தை விட 100 பிபிஎஸ் ஆகும். இதன் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதம் திட்டம் 7.50%.

35
IDBI FD interest rates

ஐடிபிஐ வங்கி அதன் உத்சவ் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தை செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 300 நாட்கள், 375 நாட்கள் மற்றும் 444 நாட்கள் மற்றும் 700 நாட்களுக்கு முதலீடு செய்யலாம்.

300 நாட்களுக்கான முதலீட்டில் பொது குடிமக்களுக்கு 7.05% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டியும் கிடைக்கும். 375 நாட்களுக்கு முதலீடு செய்தால் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.15%, மூத்த குடிமக்களுக்கு 7.65% வட்டி வழங்கப்படுகிறது.

444 நாட்கள் என்றார், பொது குடிமக்களுக்கு 7.35%, மூத்த குடிமக்களுக்கு 7.85% வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமான 700 நாள் முதலீட்டில் பொதுமக்களுக்கு 7.20% மூத்த குடிமக்களுக்கு 7.70% வட்டி கிடைக்கும்.

45
Punjab & Sind Bank FD interest rates

பஞ்சாப் & சிந்த் வங்கியும் தனது சிறப்பு நிலையான வைப்புநிதித் திட்டங்களுக்கான கடைசி தேதியை செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. இந்த வங்கியில் 222 நாட்கள், 333 நாட்கள் மற்றும் 444 நாட்கள் முதலீடு செய்து அதிக வட்டியைப் பெறலாம். 222 நாட்களுக்கான FDக்கு, 6.30% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 333 நாட்களுக்கு 7.15%, 444 நாட்களுக்கு 7.25% வட்டியை வழங்குகிறது.

55
Indian Bank FD interest rates

இந்தியன் வங்கி தனது Ind Super 300 என்ற திட்டத்தின் கீழ் 300 நாட்கள் முதலீடு செய்தால் 7.05% வட்டி கொடுக்கிறது. இதே திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டியைத் தருகிறது. சூப்பர் சீனியர்களுக்கு 7.80% வட்டி வழங்குகிறது. 400 நாட்களுக்கு சிறப்பு FD திட்டத்தில் பொது மக்களுக்கு 7.25%, மூத்த குடிமக்களுக்கு 7.75% மற்றும் சூப்பர் சீனியர்களுக்கு 8.00% வட்டியை அளிக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories