ரயில் டிக்கெட் முன்பதிவில், வெறும் 45 பைசாவில் பயணக் காப்பீட்டைச் சேர்க்கும் வசதி உள்ளது. இந்தக் காப்பீடு விபத்து, உயிரிழப்பு போன்ற சமயங்களில் பெரும் நிவாரணம் அளிக்கிறது.
ரயில் டிக்கெட் காப்பீடு – 45 பைசாவில் கிடைக்கும் பெரிய பாதுகாப்பு
பலர் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, "பயண காப்பீடு திட்டத்தை சேர்க்க வேண்டுமா?" என்று ஒரு கேள்வி வருவது கவனித்திருப்பீர்கள். 45 பைசா என்ற சிறிய தொகை என்பதால் சிலர் அதை எடுத்து விடுகிறார்கள், சிலர் புறக்கணித்து விடுகிறார்கள். ஆனால், இந்தக் காப்பீடு உண்மையில் என்ன பயன் தருகிறது என்று பார்க்கலாம்.
27
ஆப்ஷனல் காப்பீடு திட்டம் என்ன?
இந்த திட்டம் "ஆப்ஷனல் பயண காப்பீடு" என்ற பெயரில் இயங்குகிறது. ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் போது, 45 பைசா பிரீமியம் கட்டணம் பிடிக்கப்பட வேண்டுமா என்று கேட்கப்படும். "ஆம்" என்று தேர்வு செய்தால், அந்த தொகை டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து பிடிக்கப்படும். டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்டதும், காப்பீட்டு விவரங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கும் குறுஞ்செய்தியாகவும் வரும். அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி, நாமினி விவரங்களை பதிவு செய்வது அவசியம்.
37
எந்த பயணத்திற்கு பொருந்தும்?
இந்தக் காப்பீடு அந்த ஒரு பயணத்திற்கே பொருந்தும். டிக்கெட்டை ரத்து செய்தால், பிரீமியம் திருப்பி வழங்கப்படாது. ஆனால், பயணத்தின் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், இந்தக் காப்பீடு பெரிய நிவாரணமாக இருக்கும்.
47
வழங்கப்படும் இழப்பீடு என்ன?
இந்தக் காப்பீடு மிகவும் குறைந்த தொகைக்கு, மிகப்பெரிய பாதுகாப்பை வழங்குகிறது.
உயிரிழப்புக்கு ₹10 லட்சம்
நிரந்தர முழு ஊனத்துக்கு ₹10 லட்சம்
நிரந்தர பகுதி ஊனத்துக்கு ₹7.5 லட்சம்
மருத்துவமனை செலவுக்கு ₹2 லட்சம்
சடலத்தை எடுத்துச் செல்லும் செலவுக்கு ₹10,000 வரை
ஒரு சாதாரண பயணத்திற்காக இத்தனை பாதுகாப்பு, 45 பைசா செலவில் கிடைக்கிறது என்பதே ஆச்சரியம்.
57
அரசு தரும் தகவல்
சமீபத்தில் பார்லிமென்டில் இதுகுறித்து மத்திய ரயில்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். கடந்த 5 ஆண்டுகளில், இந்தக் காப்பீட்டின் கீழ் 333 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மொத்தம் ₹27.22 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது பயணிகளுக்கு இந்தத் திட்டம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது.
67
சிறிய தொகைக்கு பெரிய பாதுகாப்பு
பலர் 45 பைசா என்பது ஒரு ரூபாய்க்குக் கூட குறைவான தொகை என்பதால், அதைப் பற்றி சிந்திக்காமல் தவிர்த்து விடுகிறார்கள். ஆனால், எதிர்பாராத விபத்துகள், உயிரிழப்பு, ஊனமுற்ற நிலை போன்ற சூழ்நிலைகளில் குடும்பத்திற்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கிறது. ஆகவே, அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இது மிகவும் அவசியமான காப்பீடு.
77
மறக்க வேண்டாம் மாமு.!
சிறிய தொகையை செலுத்தி, பெரிய அளவில் பாதுகாப்பைப் பெறுவது என்பது அரிதான வாய்ப்பு. ரயில் பயணத்தில் காப்பீட்டை சேர்ப்பது ஒரு புத்திசாலித்தனமான முடிவு. பயணத்தில் ஆபத்துகள் ஏற்படாதபடி பிரார்த்திக்கலாம், ஆனால் எச்சரிக்கை முன்னெச்சரிக்கையாக இந்தக் காப்பீடு குடும்பத்துக்கு பெரும் ஆதரவாக இருக்கும்.அதனால், அடுத்த முறை ரயில் டிக்கெட் எடுக்கும் போது, அந்த 45 பைசா காப்பீட்டை "ஆம்" என்று தேர்வு செய்ய மறக்காதீர்கள்.