இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo), பயணிகளுக்காக ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. Grand Runway Fest எனப்படும் இந்த ஆஃபரில், உள்நாட்டு விமான பயணத்தை வெறும் ரூ.1,299 முதல், சர்வதேச விமான பயணத்தை ரூ.4,599 முதல் பதிவு செய்யலாம். விடுமுறை திட்டமோ அல்லது தொழில் பயணமோ இருந்தாலும், இந்த சலுகை ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும்.
25
இண்டிகோ விமானம்
இந்த சலுகை 15 செப்டம்பர் 2025 முதல் 21 செப்டம்பர் 2025 வரை மட்டுமே கிடைக்கும். இதில், பயணிகள் 7 ஜனவரி 2026 முதல் 31 மார்ச் 2026 வரை டிக்கெட் பதிவு செய்தால் இந்த குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும். முக்கியமாக, இந்த சலுகை IndiGo நிறுவனத்தின் non-stop ஒருவழி (ஒரு வழி) விமானங்களுக்கு மட்டும் பொருந்தும்.
35
இண்டிகோ டிக்கெட்
பயணிகள் IndiGo-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் goindigo.in, மொபைல் ஆப் (Android/iOS), IndiGo 6ESkai அல்லது WhatsApp (+917065145858) வழியாக இந்த சலுகையை புக்கிங் செய்யலாம். குறிப்பிட்ட உள்நாட்டு வழித்தடங்களில் எகனாமி கிளாஸ் டிக்கெட் ரூ.1,299 முதல் கிடைக்கிறது. அதே போல், Stretch/Business Class பயணத்திற்கான டிக்கெட் ரூ.9,999 முதல் தொடங்குகிறது.
மேலும், IndiGo-வின் Bluechip உறுப்பினர்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில், Blu 3 உறுப்பினர்கள் 5% தள்ளுபடி, Blu 2 உறுப்பினர்கள் 8% தள்ளுபடி மற்றும் Blu 1 உறுப்பினர்கள் அதிகபட்சம் 10% தள்ளுபடியைப் பெறலாம். இதற்காக, பயணிகள் IBC10 என்ற புரமோ கோடை IndiGo வலைத்தளம் அல்லது ஆப் மூலம் பதிவு செய்யும்போது பயன்படுத்த வேண்டும்.
55
விமான டிக்கெட் புக்கிங்
அதனால், உள்நாட்டோ, வெளிநாட்டோ குறைந்த செலவில் விமானம் பிடிக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. சில நாட்கள் மட்டுமே இந்த சலுகை அமலில் இருக்கும் என்பதால், பயணிகள் உடனே புக்கிங் செய்து பயணத்தை உறுதிசெய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.