இந்திய மாநிலங்களின் மீது மலை போல் கடன் சுமை

Published : May 21, 2025, 12:17 PM IST

இந்திய மாநிலங்களின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அதிக கடன் சுமையைச் சுமந்து வருகின்றன. உள்கட்டமைப்புத் திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் பிற செலவினங்களால்கடன் அதிகரித்துள்ளது.

PREV
14
மகாராஷ்டிரா - ரூ. 7 லட்சம் கோடி கடன்

இந்திய மாநிலங்களில் அதிக வருமானம் ஈட்டும் மாநிலமாக மகாராஷ்டிரா பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த மாநிலத்திற்கு தான் அதிகமாக கடன் இருப்பதாக கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, மகாராஷ்டிராவின் தற்போதைய கடன் 7 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. மும்பை மெட்ரோ, கடலோர சாலைத் திட்டங்கள் மற்றும் தொழில்துறை மண்டலங்களில் முதலீடுகள் போன்ற மெகா-உள்கட்டமைப்புத் திட்டங்களால் மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது. அதிக கடன் இருந்த போதிலும், மகாராஷ்டிரா ஜிஎஸ்டி, கலால் வரி மற்றும் பிற வரிகள் மூலம் வருமானம் வருகின்றது.

24
உத்தரப் பிரதேசம் - ரூ.6.5 லட்சம் கோடி கடன்

உத்திர பிரதேசத்திற்கு 6.5 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளதாக கூறப்படுகிறது. அதிக மக்கள் தொகை இருப்பதால் சுகாதாரம், கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு நிறைய செலவுகள் உள்ளன. விவசாயக் கடன் தள்ளுபடிகள் மற்றும் பொது உள்கட்டமைப்பு விரிவாக்கத் திட்டங்கள் கடன் அளவை அதிகமாக்கியுள்ளது. வருமானத்திற்காக மாநிலம் போராடி வருகிறது.

34
மேற்கு வங்கம் - ரூ.5.5 லட்சம் கோடி டன்

மேற்கு வங்கம் சுதந்திரம் பெற்ற காலம் முதல் அதிக கடன் சுமை இருந்து வருகிறது. தற்போதைய கடன்கள் ₹5.5 லட்சம் கோடியை நெருங்கியுள்ளதால் நிதி மேலாண்மையில் மாற்றங்கள் மற்றும் குறைந்த வருவாய் ஈட்டல் ஆகியவை கடன்களை செலுத்துவதில் தடையாக உள்ளது. கடனைத் திருப்பி செலுத்தும் செயல்முறை, மானியங்களுக்கான அரசாங்க செலவுகள் மற்றும் “கன்யாஸ்ரீ“ மற்றும் “ரூபஸ்ரீ” திட்டங்கள் போன்ற சமூகத் திட்டங்களும் அதன் நிதிச் சுமையை குறைத்து வருகிறது.

44
தமிழ்நாடு - ரூ.5.7 லட்சம் கோடி

தமிழ்நாட்டின் கடன் தொகை 5.7 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக தெரிகிறது. அதிகரித்து வரும் புதிய கடன், நலத்திட்டங்களுக்கான அதிக செலவு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல் மற்றும் பொதுப் போக்குவரத்திற்கு வழங்கப்படும் பிற கட்டணங்கள் ஆகியவற்றால் கடன் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தமிழ்நாடு தொழில் துறை மாபெரும் சக்தியாக விளங்குவதால் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது

Read more Photos on
click me!

Recommended Stories