ஐபோன் உற்பத்தியில் இந்தியாவின் எழுச்சி: சீனாவை விஞ்சுமா?

Published : May 21, 2025, 11:27 AM IST

பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டின் தனது ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை விரிவுபடுத்த 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. 2026 இறுதிக்குள் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
15
ஸ்ரீபெரும்புதூரில் ஐபோன்கள் உற்பத்தி

இந்த நிலையில் கொரோனாவிற்கு பிறகு ஐபோன்களை உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான் நிறுவனம் சீனாவுக்கு வெளியே தொழிற்சாலைகளை அமைக்கத் தொடங்கின. இந்தியாவில், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் ஆலை அமைந்தது. தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் சில ஆண்டுகளாகவே ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

25
தமிழ்நாட்டில் ஆலையை விரிவாக்கம்

இதற்கிடையே தமிழ்நாட்டில் ஆலையை விரிவாக்கம் செய்ய சுமார் 1.5 பில்லியன் டாலரை பாகஸ்கான் முதலீடு செய்துள்ளது.. அதாவது இது இந்திய மதிப்பில் ரூ.12,800 கோடியாகும். பாக்ஸ்கான் நிறுவனம் கடந்த காலங்களில் சீனாவிலேயே பெரிய முதலீடுகளைச் செய்து வந்தது. ஆனால், கொரோனா சமயத்தில் ஏற்பட்ட சிக்கலே அதன் திட்டத்தை மாற்றி அமைக்க வைத்திருக்கிறது.

35
இந்தியாவுக்கு கிடைத்த முதலீடு

இதன் காரணமாகவே சீனாவுக்குப் போகும் முதலீடு இப்போது நமக்கு கிடைத்துள்ளது. இது நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாகவே இருக்கும் எனவும் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், 2026 இறுதிக்குள் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்றும் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

45
இந்தியா பக்கம் திரும்பும் முதலீடுகள்

கடந்த காலங்களில் சீனாவில் தான் பெரிய உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வந்த நிலையில், இப்போது இந்தியா, வியட்நாமிலும் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த மெகா முதலீடு கிடைத்துள்ளது.

55
விலகும் சீனா நெருங்கும் இந்தியா

சமீப காலங்களில் சீனா அமெரிக்கா இடையே ஏற்பட்டு வரும் இடைவெளி, அமெரிக்காவின் முதலீடுகள் இந்தியாவின் பக்கம் திரும்புகிறது என்றும் வரும் காலங்களில் அது அதிகரிக்கும் என்பதால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories