Published : May 21, 2025, 09:46 AM ISTUpdated : May 22, 2025, 04:14 PM IST
குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின் பங்குகள் இரண்டரை ஆண்டுகளில் 850% வருமானம் அளித்துள்ளன. ₹8.40ல் இருந்து ₹80 ஆக உயர்ந்துள்ள இந்தப் பங்கில் முதலீடு செய்தவர்கள் பெரும் லாபம் ஈட்டியுள்ளனர்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் எப்போதும் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கிறார்கள். நன்கு ஆராய்ந்து முதலீடு செய்தால் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. நல்ல வருமானம் பெற, சரியான இடத்தில் முதலீடு செய்வது அவசியம் ஆகும்.
25
அதிக வருமானம் தரும் பங்குகள்
அந்த வகையில், பென்னி பங்குகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் பங்குகள் ஆக உள்ளது. பங்குச் சந்தையில் சில பங்குகள் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை அளித்துள்ளன. இரண்டரை ஆண்டுகளில் குறைந்தது 850% வருமானம் அளித்துள்ளது இந்தப் பங்கு.
35
மல்டிபேக்கர் பங்கு 2025
இது ஒரு மல்டிபேக்கர் பென்னி பங்கு ஆகும். அது எந்த பங்கு என்ன என்பதை விரிவாக பார்க்கலாம். பங்கின் பெயர் Banganga Paper Industries ஆகும். பங்குச் சந்தையில் இது Inertia steel limited என்ற பெயரில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த 2022 டிசம்பரில், இந்தப் பங்கின் விலை ₹8.40 ஆக இருந்தது.
மே 20, 2025 அன்று பங்கின் விலை ₹80ஐ எட்டியது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பங்கில் ₹1 லட்சம் முதலீடு செய்திருந்தால், இப்போது அந்தத் தொகை கிட்டத்தட்ட ₹9.50 லட்சமாக இருக்கும். மார்ச் மாதத்தில் முடிவடைந்த நான்காம் காலாண்டில், நிறுவனம் ₹1 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
55
வருவாய் அதிகரிப்பு
முந்தைய ஆண்டின் அதே காலாண்டில் நிறுவனத்திற்கு ₹0.01 கோடி நஷ்டம் ஏற்பட்டது. 2024ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ₹0.11 கோடியாக இருந்தது, 2025ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் அந்த வருவாய் ₹20.49 கோடியாக உயர்ந்துள்ளது.