அமெரிக்கா-சீனா வரி் பேச்சுவார்த்தை முன்னேற்றம், இந்தியா-பாக் போர் பதற்றம் தணிவு ஆகியவற்றால் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ₹6,600 வரை குறைந்து ₹72,200க்கு விற்பனையாகிறது.
இந்தநிலையில், அமெரிக்கா-சீனா இடையே வரி தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் தணிந்தது போன்ற காரணங்களால் பாதுகாப்பான முதலீட்டுக்கான தேவை குறைந்தது. இதன் எதிரொலியாக கடந்த வாரம் தங்கத்தின் விலை சுமார் 4 சதவீதம் குறைந்தது. ஒட்டுமொத்தத்தில் தங்கத்தின் விலை அதன் உச்சத்திலிருந்து 7 சதவீதம் குறைந்துள்ளது.
25
சவரனுக்கு ரூ.6,600 வரை சரிவு
கடந்த வாரத்தை போல் செவ்வாய் கிழமையும் இந்தியாவில் தங்கம் விலை வெகுவாக குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு சுமார் ₹6,600 வரை விலை குறைந்து 72 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையானது. அதனை பயன்படுத்திக்கொள்ள நினைத்த வாடிக்கையாளர்கள் நகைக்கடைகளில் குவிந்தனர். அதேபோல் சர்வதேச சந்தை போக்குகளுக்கு ஏற்ப இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் கோல்ட் ஜூன் பியூச்சர்ஸ் காண்ட்ராக்டின் (gold June futures contacts) மதிப்பு செவ்வாய்க்கிழமை 10 கிராமின் விலை 92,965 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது ஒரே நாளில் 332 ரூபாய் குறைந்திருக்கிறது, அதாவது 0.36 சதவீதம் குறைந்திருக்கிறது.
35
தங்கத்திற்கு ஈடுகொடுத்த வெள்ளி
அதேபோல் வெள்ளிக்கான சில்வர் ஜூலை பியூச்சர்ஸ் கான்ட்ராக்ட் (silver July futures contract) ஒரு கிலோவின் மதிப்பு 95 ,172 ரூபாயாக இருக்கிறது. இது முந்தைய நாளை விட 281 ரூபாய் குறைவு. இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை என்பது அதிகபட்சமாக 99,358 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. இது தான் தங்கத்தின் வரலாறு காணாத உச்சம். அதிலிருந்து தற்போது கிட்டத்தட்ட 6513 ரூபாய் அளவிற்கு தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது.
இந்தியா, உக்ரைன் மற்றும் பாலஸ்தீனத்தில் போர் பதற்றம் குறைந்துள்ளதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை தவிர்த்து பங்கு சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளதாகவும், இதுவே தங்கம் விலை சரிவடைந்ததற்கு காரணம் எனவும் தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்க ஆசிய சந்தைகள் மீண்டு வருவதும் மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது.
55
தங்கத்தை வாங்கி குவிக்கலாம்
தங்கம் வாங்குவதற்கு இது சாதகமான சூழல் எனவும், இதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜிலானி தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் தங்கம் விலையிள் சிறிது ஏற்ற இறக்கம் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.