ஓசூரில் ஐபோன் 16 உற்பத்தி: டாடாவின் புதிய பாய்ச்சல்?

Published : May 21, 2025, 09:15 AM IST

டாடா குழுமம்  ஓசூர் ஆலையில் ஐபோன் 16 மற்றும் 16e மாடல்களை தயாரிக்க தொடங்கியுள்ளதாக  தெரிகிறது. விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரானின் இந்திய கிளைகளை டாடா வாங்கியுள்ளதால், எதிர்காலத்தில் ஐபோன்கள் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

PREV
16
ஓசூர் ஆலையில் உற்பத்தி

டாடா குழுமத்தின் மின்னணுப் பிரிவு, மொபைல் போன் அசெம்பிளைத் தொடங்க தனது ஓசூர் ஆலையில் ஒரு புதிய யூனிட்டைத் திறந்துள்ளது என்று கூறப்படுகிறது.

26
சீனாவால் கிடைத்த வாய்ப்பு

அமெரிக்க - சீனா இடையே உள்ள பனிப்போர் காரணமாக, சீனாவுக்கு வெளியே உற்பத்தி மையத்தை அமைக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த வாய்ப்பு டாடா மூலம் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

36
அசெம்பிளிங் பணி துவக்கம்

இதுவரை, டாடா நிறுவனம் ஓசூர் ஆலையில், ஐபோனுக்கான உறைகளை மட்டும் உருவாக்கி வந்த நிலையில், தனது கர்நாடகா ஆலையில் மொபைல் போன் அசெம்பிளிங் பணியை தொடங்கியதாக தெரிகிறது.

46
உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

ஐபோன்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தியை அதிகப்படுத்த டாடா நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் கைகோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

56
ஐபோன் 16 மாடல் தயாரிப்பு

டாடா எலக்ட்ரானிக்ஸ் அதன் ஓசூர் ஆலையில் ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16e உள்ளிட்ட ஐபோன் மாடல்களை அசெம்பிள் செய்யத் தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இது குறித்து இரு நிறுவனங்களும் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

66
கையை கடிக்காத விலையில் ஐபோன்கள்

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பிற ஆப்பிள் சப்ளையர்களான விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரானின் இந்திய கிளைகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  ஒரு லட்சம் ரூபாய்க்கு காரை வழங்கி அடித்தட்டு மக்களை மகிழ்ச்சி படுத்திய டாடா நிறுவனத்தால், எல்லோருக்கும் குறைந்த விலையில் ஐபோன்கள் கிடைக்கும் நிலை ஏற்படும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories