புதிய விதிகளின்படி, சாதாரண வகுப்புகளில் 215 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்பவர்கள் கிலோமீட்டருக்கு 1 பைசா கூடுதலாக செலுத்த வேண்டும். மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஏசி அல்லாத மற்றும் ஈசி வகுப்புகளில் கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 215 கிலோமீட்டருக்குள் பயணம் செய்பவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. உதாரணமாக, ஈசி அல்லாத பெட்டியில் 500 கி.மீ பயணம் செய்தால் கூடுதலாக ரூ.10 மட்டுமே செலவாகும். புறநகர் ரயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு இந்த உயர்வு பொருந்தாது என்பதால், தினசரி பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.