Train Ticket Fare Hike: ரயில் கட்டணம் இந்த ஆண்டில் 2வது முறையாக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை, கோவை, பெங்களூரு மற்றும் நெல்லைக்கு டிக்கெட் கட்டணம் எவ்வளவு உயர்ந்துள்ளது? என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், சாதாரண முன்பதிவில்லாத ரயில்கள், மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் வந்தே பாரத், தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ரயில் கட்டணத்தை இந்த ஆண்டில் 2வது முறையாக உயர்த்தி பயணிகளுக்கு இந்தியன் ரயில்வே அதிர்ச்சி அளித்துள்ளது.
24
ரயில் கட்டணம் எவ்வளவு உயர்வு?
அதாவது ரயில்களின் சாதாரண வகுப்புகளில் (Unreserved/General) 215 கி.மீ-க்கு மேல் பயணம் செய்தால், கி.மீ-க்கு 1 பைசா உயரும். 215 கி.மீட்டருக்கு வரை சாதாரண வகுப்புகளில் கட்டண உயர்வு இல்லை. அதே வேளையில் ரயில்களின் முன்பதிவு பெட்டிகள் (Sleeper) மற்றும் ஏசி (AC) பெட்டிகளுக்கு கி.மீ-க்கு 2 பைசா டிக்கெட் உயரும். புறநகர் ரயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் உயரவில்லை.
34
சென்னை டூ கோவை, நெல்லை கட்டணம் எவ்வளவு?
புதிய ரயில் கட்டணம்படி பார்த்தால் சென்னை டூ நெல்லை இடையே சுமார் 630 கிமீ தொலைவுக்கு அன்ரிசர்டு (Unreserved) பெட்டிகளில் வழக்கமான கட்டணத்தை விட ரூ.6.50 கூடுதலாக வசூலிக்கப்படும். ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் கூடுதலாக ரூ.13 கட்டணம் வசூலிக்கப்படும்.
சென்னை டூ கோவை இடையே சுமார் 500 கிமீ தொலைவுக்கு அன்ரிசர்டு (Unreserved) பெட்டிகளில் கூடுதலாக ரூ.4.50 வசூலிக்கப்படும். ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் கூடுதலாக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்.
இதேபோல் சென்னை டூ மதுரை இடையே சுமார் 500 கிமீ தொலைவுக்கு அன்ரிசர்டு (Unreserved) பெட்டிகளில் கூடுதலாக ரூ.4.50 வசூலிக்கப்படும். ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் கூடுதலாக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்.
சென்னை டூ பெங்களூருவை பொறுத்தவரை சுமார் 330 கிமீ தொலைவுக்கு அன்ரிசர்டு (Unreserved) பெட்டிகளில் கூடுதலாக ரூ.3.50 வசூலிக்கப்படும். ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் கூடுதலாக ரூ.8 கட்டணம் வசூலிக்கப்படும். சென்னையில் இருந்து திருச்சிக்கும் இதே தொலைவு என்பதால் திருச்சிக்கும் இதே கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.