ரூ.1307 கோடி! உலகின் விலையுயர்ந்த படகை வைத்திருக்கும் இந்திய கோடீஸ்வரர்; அம்பானி, அதானி இல்ல!

First Published | Aug 21, 2024, 7:07 PM IST

இந்திய கோடீஸ்வரர்களில் சிலர் மட்டுமே ஆடம்பர படகுகளை சொந்தமாக வைத்துள்ளனர். அதில் உலகின் மிக விலை உயர்ந்த படகை வைத்திருக்கும் இந்தியர் யார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

Indian Billionaires

இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே வருகிறத, ஃபோர்ப்ஸின் 2023 பட்டியலில் பில்லியனர்களின் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது. இந்திய கோடீஸ்வரர்களின் ஆடம்பர வாழ்க்கை குறித்த தகவல்கள் அவ்வப்போவது வெளியான வண்ணம் உள்ளன. அரண்மனை போன்ற வீடுகள் மற்றும் தனியார் ஜெட் விமானங்கள் மூலம் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகின்றனர்..

Indian Billionaire

பலர் செழுமையான போக்குவரத்து முறைகளில் முதலீடு செய்திருந்தாலும், முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் சிங்கானியா உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே படகுகளை வைத்துள்ளனர். இருப்பினும், ஒரு இந்திய கோடீஸ்வரர் உலகின் மிக விலை படகை வைத்திருக்கிறார். அவர் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Tap to resize

Lakshmi Mittal Yacht

இந்தியாவின் கோடீஸ்வரரான லக்ஷ்மி மிட்டல், தனது அசாதாரண சொகுசு படகு மூலம் கவனத்தை ஈர்க்கும் இந்திய பில்லியனர் ஆவார். ஆர்சிலர் மிட்டலின் தலைவரான இவரின் சொத்து மதிப்பு 16.3 பில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1,35,282 கோடி ஆகும். உலகின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ArcelorMittal நிறுவனம் உள்ளது.

உலகின் மிகப்பெரிய வீடு இதுதான்! முகேஷ் அம்பானியின் ரூ.15000 கோடி வீட்டை விட பல மடங்கு பெரியது!

Lakshmi Mittal

லக்ஷ்மி மிட்டலின் அமேவி படகு அவரின் கோடீஸ்வர வாழ்க்கைக்கு ஒரு சான்றாகும். சுமார் ரூ.1,037 கோடி மதிப்புள்ள அமேவி (Amevi) என்ற சூப்பர் படகை வைத்திருக்கிறார். 262 மீட்டர் நீளமுள்ள இந்த படகு பல ஆடம்பர அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த சொகுசுப் படகு புகழ்பெற்ற இண்டீரியர் டிசைனர் ஆல்பர்டோ பின்டோவால் 2007-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. பிரபல இத்தாலிய படகு வடிவமைப்பு ஸ்டுடியோ நுவோலாரி லெனார்ட் என்று நிறுவனம் இந்த படகை உருவாக்கியது. அமேவி நவீன கடல்சார் ஆடம்பரத்தின் அடையாளமாக திகழ்கிழது..

Lakshmi Mittal

லக்ஷ்மி மிட்டலின் ஆடம்பர கப்பலான அமேவியில் சூடான நீச்சல் குளம், சினிமா ஹால், உடற்பயிற்சி கூடம், மசாஜ் அறை, ஹெலிபேட், 8 விஐபி அறைகள் உள்ளன. இதில் 16 பேர் தங்கலாம். இதில் உள்ள 10 கேபின்களில் 22 பணியாளர்கள் தங்கலாம், 

Lakshmi Mittal Yacht

இந்த ஆடம்பர கப்பலில் இரட்டை டீசல் MTU 16V 595 TE70 16-சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும், அமேவி 14 நாட்டிகல் வரை பயண வேகத்தை அடைய முடியும். இந்த சக்திவாய்ந்த எஞ்சின் செயல்திறன் மற்றும் ஆடம்பரம் இரண்டும் தடையின்றி ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்கிறது.

Mukesh Ambani

மற்றொரு முக்கிய இந்திய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, தனது சொந்த ஆடம்பரமான படகை வைத்திருக்கிறார். அம்பானியின் இந்த படகின் விலை ரூ. 829 கோடி என்று கூறப்படுகிறது. 

அம்பானி, அதானி, ரத்தன் டாடா எல்லாம் லிஸ்டில் கிடையாது.. மனித குலத்தில் மிகப்பெரிய பணக்காரர் இவர்தான்!

Anil Ambani

முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானியும் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள TIAN என்ற படகு வைத்துள்ளார். TIAN ஆனது ஆடம்பர மற்றும் உயர்தர வாழ்க்கைக்கான அம்பானி குடும்பத்தின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது.

Latest Videos

click me!