இனி எங்க போனாலும் பிளைட்டுல போகலாம்.! 100 இடங்களில் ஏர்போர்ட் வரப்போகுது.! கண்டிப்பா உங்க ஊரும் இருக்கும்.!

Published : Sep 02, 2026, 01:50 PM IST

புதிய விமான நிலையங்கள்: மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, 'உதான்' திட்டத்தின் கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் ₹30,000 கோடி செலவில் 100 புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

PREV
15
இந்தியாவில் 100 புதிய விமான நிலையங்கள்

இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளில் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். ‘உதான்’ திட்டத்தின் அடுத்தகட்டத்தின் கீழ் சுமார் ₹30,000 கோடி முதலீட்டில் இந்த விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் சிறிய நகரங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கும் விமான இணைப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ள நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் 100 விமான நிலையங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு விமானப் பயணம் மேலும் எளிதாகவும் வசதியாகவும் மாறும் வாய்ப்பு உள்ளது.

25
ஹப் அண்ட் ஸ்போக் சேவை என்றால் என்ன?

Hub & Spoke என்பது பெரிய விமான நிலையத்தை ஒரு மையமாக (Hub) வைத்து, சிறிய மற்றும் பிராந்திய விமான நிலையங்களை அதனுடன் இணைக்கும் பயண முறை ஆகும். உதாரணமாக, அகமதாபாத்தில் இருந்து புறப்படும் பயணிகள், டெல்லி போன்ற முக்கிய மைய விமான நிலையம் வழியாக பல்வேறு சர்வதேச நகரங்களுக்கு எளிதாகச் செல்ல முடியும். இந்த முறையில், பயணிகளின் சுங்கம், குடியேற்றம் மற்றும் பேக்கேஜ் தொடர்பான நடைமுறைகள் தொடக்க விமான நிலையத்திலேயே மேற்கொள்ளப்படுவதால், அடுத்த கட்டப் பயணம் எளிதாகிறது.

அகமதாபாத் தற்போது இந்தியாவின் மூன்றாவது விமான நிலையமாக இந்த சர்வதேச Hub & Spoke கட்டமைப்பில் இணைந்துள்ளது. இதற்கு முன்பு வாரணாசி மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பயணிகளை இந்தியாவின் முக்கிய விமான மையங்கள் வழியாக உலகின் பல சர்வதேச destinations-களுடன் தடையற்ற முறையில் இணைப்பதாகும்.

35
விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-லிருந்து 166 ஆக உயர்வு

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. 2014-ல் நாட்டில் 74 செயல்பாட்டில் இருந்த விமான நிலையங்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சிறிய நகரங்கள், தொலைதூரப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விமான இணைப்பு விரிவடைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் சராசரியாக 40 நாட்களுக்கு ஒருமுறை புதிய விமான நிலையம் அல்லது புதிய முனையம் அமைக்கும் அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சி, இந்தியாவின் விமான உள்கட்டமைப்பு வேகமாக விரிவடைந்து வருவதற்கான முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

45
உதான் திட்டம்: அடுத்த 10 ஆண்டுகளில் விமானப் பயணத்தில் புரட்சி
சாதாரண மக்களும் விமானத்தில் பயணிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட உடான் திட்டம், அடுத்தகட்டமாக 100 புதிய விமான நிலையங்கள் மூலம் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
55
பிராந்திய விமான இணைப்புத் திட்டத்திற்கு ₹28,840 கோடி ஒதுக்கீடு

நாட்டின் சிறிய நகரங்கள் மற்றும் விமான சேவை இல்லாத பகுதிகளுக்கு விமான இணைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், Modified UDAN திட்டத்தை 2026-27 முதல் 2035-36 வரை 10 ஆண்டுகளுக்கு செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக மொத்தம் ₹28,840 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சேவை இல்லாத விமான ஓடுதளங்களில் இருந்து 100 விமான நிலையங்கள் உருவாக்கவும், சுமார் 441 விமான நிலையங்கள் மற்றும் ஏரோட்ரோம்களுக்கு பராமரிப்பு ஆதரவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் 200 நவீன ஹெலிபேடுகள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் பிராந்திய விமானப் போக்குவரத்து வளர்ச்சியடைந்து, பொதுமக்களுக்கு மலிவான விமானப் பயணம் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories