மற்ற போக்குவரத்து துறைகளுடன் ஒப்பிடும்போது ரயில் பயணம் வசதியானது, பாதுகாப்பானது மட்டுமல்ல, மலிவானது. எனவே ஏழை, நடுத்தர மக்கள் எங்கு செல்ல வேண்டுமானாலும் ரயில்களையே பெரிதும் நாடுகிறார்கள்... இப்படி சாதாரண மக்களின் பயண சாதனமாக ரயில்கள் மாறிவிட்டன. ஆண், பெண், சாதி, மத, பிராந்திய வேறுபாடுகளை அறியாது... தன்னை நாடுபவர்களை அவர்களின் சேருமிடங்களை அடையச் செய்வதே ரயிலின் வேலை. அதனால் தான் நூறு ஆண்டுகளைக் கடந்தாலும் ரயில்வேயின் மதிப்பு சிறிதும் குறையவில்லை.
ஆனால், ஏழைகளுக்கு உற்ற துணையாக இருக்கும் இந்த ரயில்வேயும் ஏழைதான் என்று நினைத்தால் அது தவறு. நம் இந்தியன் ரயில்வேஸ் பொரளாதாரத்தில் மிகவும் வலிமையாக உள்ளது. இந்த நிதியாண்டில் (2024-25) ரயில்வேக்கு ரூ.2,62,200 கோடியை ஒட்டிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றால் அது எவ்வளவு பெரிய பணக்கார நிறுவனம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
நம் ரயில்வேயில் நூறு கோடிகளுக்கு மேல் சம்பாதிக்கும் ரயில்களும் உள்ளன. இந்திய ரயில்வேக்கு சில ரயில்கள் மூலம் மிகப்பெரிய அளவில் வருமானம் கிடைக்கிறது. அப்படிப்பட்ட டாப் 5 ரயில்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.