இந்தியாவின் விசித்திர ரயில் நிலையம்.. பெயரே கிடையாது.. ஆனால் ரயில் நிற்கும்.. டிக்கெட் கொடுப்பாங்க.. எப்படி?

Published : Feb 03, 2026, 05:48 PM IST

பெயரே இல்லாவிட்டாலும் இந்த நிலையம் மிகவும் பிசியாக இயங்கி வருகிறது. தினமும் சுமார் 6 ரயில்கள் இங்கு வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தடையின்றி நடக்கிறது.

PREV
13
ரயில் போக்குவரத்து முதுகெலும்பு

இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. பண்டிகை காலங்களில் டிக்கெட் கிடைப்பது 'குதிரைக்கொம்பு' என்றாலும், குறைந்த கட்டணத்தில் சொகுசான பயணத்திற்காக மக்கள் ரயிலையே நம்பியுள்ளனர்.

 இந்தியாவில் மொத்தம் 7,301 ரயில் நிலையங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு அடையாளம், ஒரு பெயர் உண்டு. ஆனால், மேற்கு வங்கத்தில் ஒரு ரயில் நிலையம் மட்டும் சுமார் 18 ஆண்டுகளாகப் பெயரே இல்லாமல் இயங்கி வருகிறது. என்னடா உளர்ற என நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது.

பெயர் இல்லாத ரயில் நிலையம்

நான் கூறுவது உண்மை தான். மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் நகரத்திலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் இந்த வினோத ரயில் நிலையம் அமைந்துள்ளது. 

பான்குரா - மசாகிராம் ரயில் பாதையில் அமைந்துள்ள இந்த நிலையம், கடந்த 2008-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை இந்த நிலையத்தின் பிளாட்பாரங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகள் வெறும் 'மஞ்சள்' நிறத்தில் மொட்டையாகவே காட்சியளிக்கின்றன.

23
இரு கிராம மக்களின் மோதல்

இந்த வினோதத்திற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான பஞ்சாயத்து உள்ளது. அதாவது பெயர் இல்லாத இந்த நிலையம் ரெய்னாகர் (Rainagar) மற்றும் ராய்நகர் (Raina) ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டபோது, தங்கள் கிராமத்தின் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று இரு கிராம மக்களும் தெரிவித்தனர்.

தொடக்கத்தில் ரயில் நிலையத்துக்கு 'ரெய்னாகர்' என்று பெயரிடப்பட்டது. ராய்நகர் மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது நீக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் முற்றி நீதிமன்றம் வரை சென்று வழக்கு நிலுவையில் உள்ளது. கிராம மக்களின் எதிர்ப்பு சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க ரயில்வே நிர்வாகம் பெயர்ப் பலகைகளை அப்படியே காலியாக விட்டுவிட்டது.

33
டிக்கெட் எப்படி எடுப்பது? டிக்கெட் எப்படி கொடுப்பார்கள்?

பெயரே இல்லாவிட்டாலும் இந்த நிலையம் மிகவும் பிசியாக இயங்கி வருகிறது. தினமும் சுமார் 6 ரயில்கள் இங்கு வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தடையின்றி நடக்கிறது. பெயர் இல்லாத நிலையத்துக்கு எப்படி டிக்கெட் கேட்பது? எப்படி டிக்கெட் கொடுப்பார்கள்? என நீங்கள் கேட்பது சரி தான். இந்த ரயில் நிலையத்தின் பெயர்ப் பலகைதான் காலியாக இருக்கிறதே தவிர, டிக்கெட்டுகள் இப்போதும் பழைய பெயரான 'ராய்நகர்' என்ற பெயரிலேயே வழங்கப்படுகின்றன.

ரயில்வே எப்போது பெயர் சூட்டும்?

இருப்பினும், இந்த ஊருக்குப் புதிதாக வரும் பயணிகள் தங்களது இறப்பிடம் தெரியாமல் குழப்பமடைவது தொடர்கதையாக உள்ளது. உள்ளூர் மக்களிடம் விசாரித்த பிறகே தாங்கள் சரியான இடத்திற்கு வந்துள்ளோமா என்பதை அவர்கள் உறுதி செய்து கொள்கின்றனர். நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்தால் இந்த ரயில் நிலையத்துக்கு ரயில்வே பெயர் சூட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories