மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வரப்பிரசாதம்! வருமான வரியை சேமிக்க முத்தான வழிகள்!

First Published | Jul 17, 2024, 7:34 PM IST

வருமான வரி விலக்கு வரம்புக்கு அதிகமாக சம்பாதிக்கும் மக்களுக்கு வரி சேமிப்பு வழிகள் பல உள்ளன. சேமிப்புத் திட்டங்கள், காப்பீடு போன்றவற்றில் முதலீடு செய்வது வருமான வரியைச் சுலபமாகச் சேமிக்க உதவும்.

வருமான வரி சேமிப்பு வழிகள்

2023-2024 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31ஆம் தேதி. ஒரு நபர் பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்திருந்தால், ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை. புதிய வரி முறையைத் தேர்வு செய்பவர்களுக்கு ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி வசூலிக்கப்படுவதில்லை.

இந்த வருமான வரி விலக்கு வரம்புக்கு அதிகமாக சம்பாதிக்கும் மக்களுக்கு வரி சேமிப்பு வழிகள் பல உள்ளன. சேமிப்புத் திட்டங்கள், காப்பீடு போன்றவற்றில் முதலீடு செய்வது வருமான வரியைச் சுலபமாகச் சேமிக்க உதவும்.

1. வீட்டுக் கடன்கள்

வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், பிரிவு 80C இன் கீழ் அதன் அசல் தொகைக்கு வரி விலக்கு பெறலாம். கூடுதலாக, வருமான வரிச் சட்டத்தின் 24(b) பிரிவின் கீழ் வீட்டுக் கடனுக்கான வட்டியில் விலக்கு பெறலாம். ரூ.2 லட்சம் வரை வட்டியில் வரிவிலக்கு கிடைக்கும்.

Latest Videos


2. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF)

சம்பளம் பெறுபவர்கள் வரியைச் சேமிக்க எளிய வழிகளில் ஒன்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF). இது வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கிறது. பிஎஃப் கணக்கில் ஆண்டுதோறும் பெறப்படும் ரூ.2.5 லட்சம் வரையிலான வட்டிக்கு வரி கிடையாது.

3. வீட்டு வாடகை படி (HRA)

வீட்டு வாடகை படி (HRA) என்பது ஊழியர்களுக்கு அவர்களின் வீட்டு வாடகையை செலுத்துவதற்காக வழங்கப்படும் தொகை ஆகும். சில வரம்புகளுக்கு உட்பட்டு, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10(13A) இன் கீழ் இதற்கு வரி விலக்கு பெறலாம். மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 50% வரையும் சிறிய நகரங்களில் இருப்பவர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 40% வரையும் வரி விலக்கு அளிக்கப்படும். வீட்டு வாடகைக்காக மொத்த ஆண்டு வருமானத்தில் 10% வரை வரி விலக்கு பெறலாம்.

4. இன்சூரன்ஸ் பாலிசி

மருத்துவக் காப்பீடுக்காக பாலிசி எடுத்து அதற்கான பிரீமியத்தைச் செலுத்தும்போது, வருமான வரிச் சட்டத்தின் 80D பிரிவின் கீழ், வரி விலக்கு கிடைக்கும். உங்களுக்காகவும், மனைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும், பெற்றோருக்காகவும் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தால், ரூ.25,000 வரையிலான பிரீமியத்திற்கு இந்த வரிச்சலுகை கிடைக்கும். மூத்த குடிமக்களாக இருந்தால், வரி விலக்கு வரம்பு ரூ.50,000 ஆக அதிகரிக்கும்.

5. கல்விக் கட்டணம்

குழந்தைகளின் கல்விக்காக பள்ளி அல்லது கல்லூரிக் கட்டணம் செலுத்துவதற்கும் வரி விலக்கு பெறலாம். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் பிரிவு 17ன் கீழ், வரி வலக்கு கிடைக்கும். இரண்டு குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்திற்கு இந்த வரிச்சலுகையைப் பெறலாம். இந்த வரி விலக்கு பெற, மாணவர் சேர்க்கை சான்றிதழ் மற்றும் கல்விக் கட்டண ரசீதுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

click me!