வருமான வரித்துறை சோஷியல் மீடியா கணக்கையும் ஆய்வு செய்யலாம்! புதிய விதியில் பிரைவசி மீறலா?

Published : Mar 05, 2025, 03:42 PM ISTUpdated : Mar 07, 2025, 10:31 AM IST

New power for Income Tax Department: புதிய வருமான வரி மசோதா வரி செலுத்துவோரின் டிஜிட்டல் தகவல்களை ஆய்வு செய்ய வருமான வரி அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் மற்றும் வர்த்தக கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை அணுகுவது தனியுரிமை மீறலுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

PREV
15
வருமான வரித்துறை சோஷியல் மீடியா கணக்கையும் ஆய்வு செய்யலாம்! புதிய விதியில் பிரைவசி மீறலா?
Income Tax Alert

Social Media connected wtih Income Tax Alert: புதிய வருமான வரி மசோதா வரிச் சட்டங்களை எளிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், மசோதாவில் உள்ள ஒரு விதி, வருமான வரி தாக்கல் விசாரணையின்போது மின்னஞ்சல்கள், சமூக வலைத்தளப் பக்கங்கள் மற்றும் வர்த்தக கணக்குகள் உள்ளிட்ட வரி செலுத்துவோரின் தனிப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ப்படலாம் என்று கூறுகிறது. இதன் மூலம் வருமான வரி அதிகாரிகள் வரி செலுத்துவோரின் தனிப்பட்ட தகவலைகளைப் பார்வையிட விரிவான அதிகாரம் வழங்கப்படுகிறது என்பதால், புதிய மசோதா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

25
Virtual digital spaces

புதிய மசோதாவில் பிரிவு 247 சொல்வது என்ன?

இந்த விதி ஏற்படுத்தியுள்ள முக்கியக் கவலை "மெய்நிகர் டிஜிட்டல் இடங்கள்" (Virtual digital spaces) பற்றியது.  புதிய மசோதாவின் கீழ், வரி அதிகாரிகள் டிஜிட்டல் சொத்துக்களை அணுக அனுமதி கோரலாம் என்றும், வரி செலுத்துவோர் அனுமதிக்க மறுத்தால், அதிகாரிகள் பாஸ்வேர்டுகள் இல்லாமலே உள்நுழையலாம் என்றும் கூறப்படுகிறது. டிஜிட்டல் தளங்களில் பயனரின் பாதுகாப்பு அமைப்புகளை மீறி, அவர்கள் கோப்புகளைப் பார்க்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

35
Income Tax Filing

டிஜிட்டல் பதிவுகள்:

தற்போது, வருமான ​​வரித்துறை அதிகாரிகள் லேப்டாப், ஹார்டு டிரைவ்கள் மற்றும் மின்னஞ்சல்களை அணுக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தற்போதைய வருமான வரிச் சட்டம் டிஜிட்டல் பதிவுகள் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. இதன் காரணமாகவே இதுபோன்ற நடவடிக்கைகளின்போது எதிர்த்து வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. இதனால் வருமான வரித்துறைக்கும் பின்னடைவு ஏற்படுகிறது.

புதிய வருமான வரி மசோதாவின் பிரிவு 247 இன் கீழ், வரி ஏய்ப்பு அல்லது வரி செலுத்தாமல் உள்ள வெளியிடப்படாத சொத்துக்கள் இருப்பதாக சந்தேகித்தால், தனிநபர்களின் மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள், வங்கி விவரங்கள் மற்றும் முதலீட்டு கணக்குகளை அணுக வருமான வரி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

45
Income Tax Department

வருமான வரித்துறைக்கு அதிகாரம்:

பிரிவு (i)-ல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்காக, எந்தவொரு கதவு, பெட்டி, லாக்கர், பாதுகாப்புப் பெட்டகம், அலமாரி அல்லது பிற கொள்கலன்களின் பூட்டை உடைத்துத் திறக்கலாம். அத்தகைய அணுகுமுடியாமல் இருக்கும் எந்தவொரு கட்டிடத்திலும் நுழைந்து தேடலாம். எந்தவொரு கணினி அமைப்பு அல்லது மெய்நிகர் டிஜிட்டல் இடத்தையும் அணுக பாஸ்வேர்டு கிடைக்கவில்லை என்றால், அது இல்லாமலே உள்நுழையலாம் என்று மசோதாவின் உட்பிரிவு கூறப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. படியுங்கள்.

எளிமையாகக் கூறினால், வருமான வரி அதிகாரிகள் வரி செலுத்துவோரின் "மெய்நிகர் டிஜிட்டல் இடத்தை" அணுக புதிய விதி அனுமதி கொடுக்கிறது. கிளவுட் ஸ்டோரேஜ், மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தக தளங்கள் போன்ற இணையம் மூலம் தொடர்புகொள்ளும் எந்தவொரு தளமும் இதில் அடங்கும்.

55
New Income Tax Act

புதிய வருமான வரி மசோதா பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

புதிய விதி குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். நங்கியா ஆண்டர்சன் எல்எல்பியின் விஸ்வாஸ் பன்ஜியர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்திலிருந்து புதிய மசோதா குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். சரியான பாதுகாப்புகள் இல்லாமல், வருமான வரித்துறை அதிகாரிகள் புதிய அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யலாம் எனவம் தனியுரிமை மீறிலுக்கு வழிவகுக்கலாம் எனவும் அவர் கவலை தெரிவிக்கிறார்.

கைதான் & கோ நிறுவனத்தின் சஞ்சய் சங்வி கூறுகையில், "வருமான வரி அதிகாரிகள் முன்பு டிஜிட்டல் சாதனங்களை அணுகக் கோரியிருந்தனர். ஆனால் சட்டம் அதை வெளிப்படையாக அனுமதிக்கவில்லை. புதிய மசோதா அதற்கான சட்டப்பூர்வ தீர்வை வழங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories