Published : Mar 05, 2025, 01:16 PM ISTUpdated : Mar 05, 2025, 01:20 PM IST
கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், ஜெமினி AI ஊழியர்கள் வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். AI போட்டியை வெல்லும் முனைப்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், ஜெமினி AI மாடல்களில் பணிபுரியும் தனது ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் குறைந்தது 60 மணிநேரம் அலுவலகத்தில் இருக்குமாறு மெமோ அனுப்பியுள்ளார். கூகுள் நிறுவனம் AI தொழில்நுட்பத்தில் தீவிர கவனம் செலுத்திவரும் நிலையில், செர்ஜி பிரின் தனது ஊழியர்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளார்.
28
Google Employees
கூகுளின் AI மாடலான ஜெமினியில் பணிபுரியும் ஊழியர்களுக்கான வாரத்திற்கு 60 மணிநேரம் பணிபுரிய வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். பிப்ரவரி 26ஆம் தேதி இந்த மெமோ அனுப்பப்பட்டதாக தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
38
Google AI Model
இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஊழியர்களை பிரின் விமர்சித்துள்ளார், "பலர் 60 மணிநேரத்திற்கும் குறைவாக வேலை செய்கிறார்கள்" என்றும் இவர்கள் மற்ற அனைவருக்கும் மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறார்கள் என்றும் பிரின் குறை கூறியுள்ளார். ஜெமினியில் பணிபுரியும் ஊழியர்கள் AI தொழில்நுட்பத்தில் உலகின் மிகவும் திறமையானவர்களாக விளங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
48
Google AI tools
செயற்கை நுண்ணறிவு துறையில் உள்ள போட்டியை வெல்ல கடுமையாகப் போராட வேண்டியிருப்பதன் அவசியத்தையும் பிரின்னின் எடுத்துக்காட்டியுள்ளார். கூகுள் AI தொழில்நுட்ப பாய்ச்சலை எவ்வாறு அடைய முடியும் என்றும் விளக்கியுள்ளார்.
58
Google investment in AGI
"போட்டி மிகவும் வேகமாகிவிட்டது. AGI-க்கான இறுதிப் போட்டி தொடங்கிவிட்டது. இந்தப் போட்டியை வெல்வதற்கான அனைத்துப் பொருட்களும் நம்மிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன், ஆனால் நாம் நமது முயற்சிகளை டர்போசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் ஊழியர்கள் கோடிங் எழுதுவதற்கு AI-ஐ அதிகமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். AI-யின் முன்னேற்றம் செயற்கை உற்பத்தி நுண்ணறிவுக்கு (AGI) வழிவகுக்கும் என்று செர்ஜி பிரின் கூறியுள்ளார்.
68
Working hours
இந்தியாவில் உள்ள பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் இதேபோன்ற முனைப்புடன் உள்ளன. இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கடந்த ஆண்டு வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இளம் தொழில் வல்லுநர்கள் அதிக நேரம் உழைக்க வேண்டும் என்று வாதிட்டார். ஜனவரியில், லார்சன் & டூப்ரோ (எல் அண்ட் டி) தலைவர் எஸ்.என். சுப்ரமணியன், வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்றார்.
78
Work Life Balance
இருப்பினும், நீண்ட நேரம் பணிபுரிய வேண்டும் என்று கூறும் சிஇஓக்களின் கருத்துக்கு கடுமையான விமர்சனங்கள் வந்தன. வேலையில் அதிக நேரம் செலவிடும்போது தவறுகள் அதிகரிப்பதற்கும் வேலையில் உள்ள ஆர்வம் குறைவதற்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறினர்.
88
Capgemini
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சியில் பேசிய கேப்ஜெமினி நிறுவனத்தின் இந்தியாவுக்கான சி.இ.ஓ. அஷ்வின் யார்டி, வாரத்திற்கு சுமார் 47.5 மணிநேரம் வேலை நேரத்தைப் பின்பற்றுவது சிறப்பானதாக இருக்கும் என்று பரிந்துரைத்தார். மற்றவர்கள் 60 முதல் 90 மணிநேர வேலை நேரத்தைப் பரிந்துரைத்த நிலையில், அஷ்வின் மிகவும் குறைவான நேரத்தைப் பரிந்துரை செய்துள்ளார்.