நாட்டில் தங்கத்தின் மீதான ஆர்வம் பெரும்பாலானப் பெண்களுக்கு எப்பொழுதும் உச்சத்திலேயே உள்ளது. மேலும் பல வருடங்களாகவே தங்கம் பாதுகாப்பான முதலீடாக இருப்பதாலும் அதனை வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகின்றனர். பொதுமக்களின் அதீத ஆசையால் தங்கம் நாளுக்கு நாள் அதிரடியாக விலை உயர்ந்து வருகிறது.
Golden Crown
தங்கம் வாங்க அதிக முனைப்பு காட்டுபவர்கள் இரு வகைகளாக உள்ளனர். ஒருவர் சொத்து மதிப்பை உயர்த்தும் நோக்கில் தங்கத்தை வாங்கி அடுக்குகிறார். மற்றொருவர் அழகியலுக்காக ஆபரணத் தங்கத்தை வாங்கிக் குவிக்கிறார். இந்நிலையில் நாட்டில் தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வரை தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது.
இதனிடையே தற்போது விஜயதசமி, ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் தற்போது தங்கத்தின் விலை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.58,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் சவரன் ரூ.58,000ஐ கடந்துள்ள நிலையில் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.