GOLD
தங்கமும் நிலமும்- முதலீடுகள்
தங்கம் மற்றும் நிலத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அதன் படி இந்த இரண்டிலும் முதலீடு செய்தவர்களுக்கு எப்போதும் நஷ்டம் ஏற்பட்டதில்லை. நிலத்தில் முதலீடு செய்தால் கூட அத்தியாவசிய தேவைக்கு பணத்தை திரும்ப பெற முடியாத நிலை இருக்கும். எனவே தங்கத்தில் முதலீடு செய்தால் எந்த நேரத்திலும் பணத்தை அள்ளிக்கொடுக்கும். எனவே கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைக்கு உடனடியாக பணம் கிடைப்பதால் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது.
gold price
உச்சத்தை தொட்ட தங்கம் விலை
மேலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகளவு மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் எப்போதும் குறைந்ததில்லை. அந்த வகையில் தங்கள் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாக தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது.
தங்கம் விலை கூடினாலும், குறைந்தாலும் தங்கத்தை வாங்க நகைக்கடைகளில் எப்போதும் கூட்டம், கூட்டமாகவே காணப்படும். திருமண நிகழ்வு, விஷேச நாட்கள் என முக்கிய நாட்களில் நகைகளை வாங்கும் விகிதமும் அதிகரிக்கும். மேலும் தங்கத்தின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் யாரும் எதிர்பார்க்க முடியாத வகையில் உயர்ந்துள்ளது.
Gold Price Today
திடீரென சரிந்த தங்கம் விலை
2010ஆம் ஆண்டு ஒரு சவரன் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒரு சவரன் தங்கம் 60ஆயிரம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டது. அந்த வகையில் தங்கத்தின் முதலீடு தற்போது இந்தியா மட்டுமல்ல மற்ற நாடுகளிலும் அதிகரித்துள்ளது. ஆனால் அடுத்த அடுத்த சில நாட்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு காரணமாக தங்கத்தின் விலை சரிய தொடங்கியது.
ஒரு சவரனுக்கு 4ஆயிரம் ரூபாய் வரை குறைந்தது. இந்த விலை குறைவு ஒரு சில நாட்கள் மட்டுமே நீடித்த நிலையில் மீண்டும் ஏறியது. மீண்டும் பழையபடி குறைய தொடங்கியது. அதன் படி இரண்டு நாட்களில் 1500 ரூபாய் அளவிற்கு குறைந்தது.
today gold rate
இன்றைய தங்கம் விலை என்ன.?
தங்கத்தின் விலையானது நாள் தோறும் ஏறி இறங்கி வரும் நிலையில் நேற்று மீண்டும் சற்று அதிகரித்தது. நேற்று தங்கம் கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் அதிகரித்து விற்பனையானது. அதன் படி சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் அதிகரித்து 56ஆயிரத்து 840 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. அதன் படி கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 7090 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது.