அடித்தது ஜாக்பாட்.! மீண்டும் குறைந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு குறைந்ததா.?

First Published | Nov 26, 2024, 9:53 AM IST

Gold price today : தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், மக்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். சமீபத்தில் ஏற்பட்ட விலை சரிவு, நகை வாங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த காலங்களில் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போதைய சரிவு முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.

GOLD

தங்கத்தில் முதலீடு

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்தாலும் தங்க நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் கூடிக்கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது.  அந்த வகையில் தங்கத்தை அதிக அளவு மக்கள் வாங்கி வருகிறார்கள். குறிப்பாக தங்கள் குழந்தைகளில் எதிர்கால சேமிப்பிற்காகவும், திருமணத்திற்காகவும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது
 

Gold Rate in Chennai

அவசர தேவைக்கு கை கொடுக்கும் தங்கம்

குறிப்பாக கல்வி மற்றும் மருத்துவ அத்தியாவசிய தேவைக்கு நகைகளை கடைகளில் விற்கவோ அல்லது அடகு வைக்கவோ முடியும். இதனால் எந்த நேரத்திலும் பணத்தை அள்ளிக்கொடுக்கும் அட்ஷயபாத்திரமாக தங்கம் உள்ளது. இதன் காரணமாகவே மக்கள் மற்றவைகளில் முதலீடு செய்வதற்கு பதிலாக தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள், அந்த வகையில் தங்கத்தின் விலையானது கடந்த 14 ஆண்டுகளில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது

Latest Videos


Gold rate in Tamil Nadu

ஏறி இறங்கும் தங்கம் விலை

இந்த நிலையில் தான் தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சரிய தொடங்கியது. அந்த வகையில் ஒரு சவரனுக்கு 4120 ரூபாய் குறைந்தது. இதனையடுத்து இந்த நல்ல சான்ஸ் விட்டுவிடக்கூடாது என மக்கள் தங்கத்தை அதிகளவில் வாங்கினர். குறிப்பாக தங்களிடம் உள்ள நகைகளை அடகுவைத்தோ, கடன் வாங்கியோ நகைகளை வாங்கினர்.

இதனையடுத்து அடுத்த ஒரு சில நாட்களில் தங்கத்தின் விலை மீண்டும் பழையபடியே அதிகரித்தது. குறிப்பாக கடந்த 10 நாட்களில் மட்டும் 3ஆயிரம் ரூபாய் உயர்ந்தது.

Gold price today

இன்றைய தங்கம் விலை

இந்தநிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது. அந்த வகையில் கிராமுக்கு 100 ரூபாய் தங்கத்தின் விலை குறைந்து 7200 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

One gram gold rate

குறைந்தது தங்கம் விலை

இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் சரிவை சந்தித்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் 7080 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்துள்ளது. அதன் படி ஒரு சவரன் 56ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு 1760 ரூபாய் குறைந்துள்ளதால் நடத்தர வர்க்க மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

click me!