ரூ.1,435 கோடியில் PAN 2.0 திட்டம்! இனி பழைய பான் கார்டு செல்லாதா?

First Published | Nov 26, 2024, 9:15 AM IST

1,435 கோடி மதிப்பிலான PAN 2.0 திட்டத்தை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட இந்த திட்டம், பான் (PAN) எண்ணை அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொது வணிக அடையாளமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

PAN 2.0 Project

1,435 கோடி மதிப்பிலான PAN 2.0 திட்டத்தை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட இந்த திட்டம், பான் (PAN) எண்ணை அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொது வணிக அடையாளமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

CCEA

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), வருமான வரித் துறையின் கீழ் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. திட்டத்தை அறிவித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தொழில்நுட்பம் சார்ந்த வரி செலுத்துவோர் பதிவுச் சேவைகள், அணுகலை எளிதாக்குதல், விரைவான சேவை வழங்குதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரம் ஆகியவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது என்றார்.

Latest Videos


Ashwini Vaishnaw

புதிய பான் கார்டு திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? தற்போதுள்ள பான் கார்டு செல்லாதா? என்ற கேள்விகள் எழலாம். அதற்கும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார். தற்போதுள்ள பான் எண்ணை மாற்ற வேண்டிய அவசியமில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக, புதிய பான் கார்டு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

PAN Card Update

மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டிற்காக QR குறியீடு உட்பட புதிய அம்சங்களுடன் PAN 2.0 கார்டு கிடைக்கும். இதில் சிறந்த அம்சம் என்னவென்றால், இந்த மேம்படுத்தப்பட்ட பான் கார்டு இலவசமாகவே வழங்கப்படும். இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட பான் கார்டுக்கு மாறுவதை உறுதிசெய்ய முடியும் என மத்திய அரசு கருதுகிறது.

What is PAN 2.0 Project

"தற்போதுள்ள அமைப்பு மேம்படுத்தப்படும். டிஜிட்டல் அம்சங்கள் புதிய வழியில் கொண்டு வரப்படும். அதை ஒரு பொதுவான வணிக அடையாளமாக மாற்ற முயல்வோம். அதற்காக ஓர் இணையதளம் உருவாக்கப்படும். அது முற்றிலும் காகிதப் பயன்பாடு இல்லாத ஆன்லைன் செயல்முறையாக இருக்கும். குறைகளைத் தீர்க்க முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

New PAN card

PAN 2.0 திட்டம் தரவு நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் சார்ந்த செயல்முறைகள் மற்றும் உள்கட்டமைப்பின் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தும். அதே நேரத்தில் செலவுகளையும் சிறப்பாகக் கையாள முயல்கிறது. அரசாங்க டிஜிட்டல் அமைப்புகளில் பான் கார்டுகளைப் பொதுவான அடையாள ஆவணமாகப் பயன்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் அமைகிறது.

Old PAN Card

வரி செலுத்துவோருக்கு மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் அனுபவத்தை வழங்குவதற்காக  e-Governance மேம்படுத்தல், PAN/TAN சேவைகளை மறுவடிவமைத்தல் ஆகியவற்றில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது. இது ஏற்கனவே உள்ள PAN/TAN 1.0 அமைப்புகளை ஒருங்கிணைக்கிறது.

தற்போது, ​​தோராயமாக 78 கோடி பான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 98% தனிநபர்களுக்கு வழங்கப்பட்டவை.

click me!