
கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. அம்பானி, அதானி போல் சம்பாதிக்க முடியாவிட்டாலும், கூட நல்ல பணம் சம்பாதித்து வாழ்க்கையில் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்பதற்காக தான் நாம் அனைவரும் நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் ஒவ்வொருவரும் பல வழிகளில் பணத்தை சம்பாதிக்கிறோம். அம்பானி, அதானி போல சிலர் சொந்தமாக பிசினஸ் செய்து பணம் சம்பாதிப்போம் ஒரு ரகம். இன்னும் சிலரோ, கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். மேலும் சிலர் கல்வி மற்றும் திறனை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்கிறார்கள். அதுபோல வரும் வாய்ப்பை பயன்படுத்தி அதன் மூலம் முன்னுக்கு வந்தவர்கள் பலரும் இருக்கின்றனர். அவர்கள் கோடீஸ்வரர்களாகவும் இருக்கின்றனர்.
ஆனால், கோடிகளை எந்தவித உடல் உழைப்புமின்றி ஈசியாக சம்பாதிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் அதுதான் உண்மை. ஆனால் அதற்கும் அதிர்ஷ்டம் தேவை. என்ன ஒன்றுமே புரியவில்லையா? நீங்கள் சுலபமாக கோடிகளை சம்பாதிக்க உங்களிடம் இந்த ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் போதும். நீங்கள் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகலாம் தெரியுமா? இந்த அரிய வாய்ப்பு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதுவரை இல்லை என்றால் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். அதற்கான முழு விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.5,000, ரூ.10,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது ஏன் தெரியுமா?
கோடிகளை சம்பாதிப்பது எப்படி?
பொதுவாகவே நம்மிடம் இருக்கும் பழைய பொருட்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் மவுசு அதிகம் தான். அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் பழைய பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் பல கோடி ரூபாயை பலர் சம்பாதித்து வருகின்றனர்.
அந்த வகையில், நம்முடைய நாட்டில் தற்போது பழைய நாணயங்களுக்கு டிமாண்ட் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அதை வைத்து இணையத்தின் மூலம் சில சமயங்களில் பல லட்சம் ரூபாயும், இன்னும் சில நேரங்களில் கோடிக்கும் அதிகமான தொகையும் விற்பனை செய்யப்படுகின்றது. இதற்காக நீங்கள் எங்கும் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
எடுத்துக்காட்டாக, உங்களிடம் இருக்கும் பழைய ஐந்து ரூபாய் நோட்டை புகைப்படம் எடுத்து, அதை ஈக்காமர்ஸ் தளத்தில் அப்லோட் செய்தால் அதை வாங்க விரும்புவோர் அதற்கான தொகையை உங்களிடம் வழங்கி விட்டு, அந்த ரூபாய் நோட்டை உங்களிடம் வாங்கிடுவார்கள்.
பழைய ஒரு ரூபாய் நாணயம்
அந்த வகையில் தற்போது நம்முடைய நாட்டில் பழைய ஒரு ரூபாய் நாணயம் டிரெண்டில் உள்ளதால், அதைக் கொடுத்து நீங்கள் பல கோடி ரூபாய்களை சம்பாதிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அதாவது, 1885 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அச்சிடப்பட்ட அந்த ஒரு ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், அது 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனைக்கு எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே நீங்கள் அந்த நாணயத்தை கொடுத்து பத்து கோடி ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: ரூ.10 ரூபாயில் தங்கத்தை வாங்கலாம்.. போன்பே மூலம் ஈசியா முதலீடு செய்யுங்க!
எங்கு விற்பனை செய்வது?
உங்களிடம் இருக்கும் பழைய ஒரு ரூபாய் நாணயத்தை நீங்கள் அதை புகைப்படம் எடுத்து ஆன்லைனில் அப்லோடு செய்தால் போதும். அதற்காக நீங்கள் E-bay, OLX, Quicker, India Mart போன்ற ஆன்லைன் தளங்களில் அந்த பழைய நாணயத்தை விற்பனை செய்தால், பத்து கோடி கிடைக்கும். இந்த பழைய நாணயத்திற்கு ஆன்லைனில் அதிகம் என்பதால் இந்த அதிர்ஷ்டம் எல்லாருக்கும் கிடைத்து விடாது.
முக்கிய குறிப்பு :
ஆன்லைனில் இதுபோன்று ரூபாய் நோட்டுகள், நாணயங்களை விற்பனை செய்வதை ரிசர்வ் வங்கி ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. ஆகவே, இந்த ஆன்லைன் பரிவர்த்தனையில் லாபம், நஷ்டம் என எது வந்தாலும் அது முழுக்க முழுக்க உங்களுடைய பொறுப்பு தான். அதுமட்டுமின்றி ஆன்லைனில் பல மோசடிகள் நடப்பதால் தீர ஆராயாமல் எந்த ஒரு செயலிலும் ஈடுபடாதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள்.