IDFC பேங்க் கஸ்டமர்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்! சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் உயர்வு!

Published : Jan 09, 2026, 04:58 PM IST

IDFC ஃபர்ஸ்ட் வங்கி தனது சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்களை ஜனவரி 9 முதல் மாற்றியுள்ளது. 'முற்போக்கான வட்டி விகித' முறையின் கீழ், கணக்கில் உள்ள இருப்புத் தொகைக்கு ஏற்ப 3% முதல் 6.5% வரை வெவ்வேறு வட்டி விகிதங்கள் வழங்கப்படும்.

PREV
14
IDFC ஃபர்ஸ்ட் வங்கி வட்டி விகிதிம் மாற்றம்

IDFC ஃபர்ஸ்ட் வங்கி (IDFC First Bank) தனது சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் இன்று முதல் (ஜனவரி 9) அமலுக்கு வருகின்றன. இந்த தனியார் துறை வங்கி, தனது தனித்துவமான 'முற்போக்கான வட்டி விகித' (Progressive Interest Rate) முறையைத் தொடர்ந்து கடைபிடிக்கிறது.

இதன் மூலம், மொத்தத் தொகைக்கும் ஒரே வட்டி வழங்கப்படாமல், உங்கள் கணக்கில் உள்ள இருப்புத் தொகையின் அளவைப் பொறுத்து வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்கள் கணக்கிடப்படும்.

24
மாற்றப்பட்ட புதிய வட்டி விகிதங்கள்

உங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள இருப்புத் தொகைக்கு ஏற்றவாறு ஆண்டுக்குக் கிடைக்கும் வட்டி விவரம் பின்வருமாறு:

• ரூ. 1 லட்சம் வரை: 3 சதவீத வட்டி.

• ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை: 5 சதவீத வட்டி.

• ரூ. 10 லட்சம் முதல் ரூ. 10 கோடி வரை: 6.5 சதவீத வட்டி.

• ரூ. 10 கோடி முதல் ரூ. 25 கோடி வரை: 6 சதவீத வட்டி.

• ரூ. 25 கோடி முதல் ரூ. 100 கோடி வரை: 5 சதவீத வட்டி.

• ரூ. 100 கோடிக்கு மேல்: 4 சதவீத வட்டி.

34
புதிய வட்டி முறை எப்படிச் செயல்படுகிறது?

உதாரணமாக, உங்கள் சேமிப்பு கணக்கில் ரூ. 10 லட்சம் இருப்பதாக வைத்துக்கொள்வோம்:

1. முதல் ரூ. 1 லட்சத்திற்கு 3 சதவீத வட்டி கணக்கிடப்படும்.

2. மீதமுள்ள ரூ. 9 லட்சத்திற்கு 5 சதவீத வட்டி வழங்கப்படும்.

அதேபோல், உங்கள் கணக்கில் ரூ. 1 கோடி இருந்தால்:

• முதல் ரூ. 1 லட்சத்திற்கு 3% வட்டி.

• அடுத்த ரூ. 9 லட்சத்திற்கு 5% வட்டி.

• மீதமுள்ள ரூ. 90 லட்சத்திற்கு 6.5% வட்டி வழங்கப்படும்.

இந்த முறையின் மூலம், அதிகப்படியான இருப்புத் தொகை வைத்திருப்பவர்கள் அதிக வருமானம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

44
கவனிக்க வேண்டியவை

• இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, வட்டித் தொகையானது ஒவ்வொரு நாளின் இறுதியிலும் கணக்கில் இருக்கும் இருப்புத் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

• கணக்கிடப்பட்ட வட்டித் தொகை மாதந்தோறும் உங்கள் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

• சேமிப்பு கணக்கு என்பது அன்றாடத் தேவைகளுக்கும் பணப்புழக்கத்திற்கும் ஏற்றது. உங்களிடம் நீண்ட காலத்திற்குத் தேவைப்படாத உபரிப் பணம் இருந்தால், அதிக லாபம் தரக்கூடிய லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகள் (Liquid Mutual Funds) போன்ற மாற்றுகளைப் பரிசீலிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories