அந்தந்த வங்கிகளை பொறுத்து அக்கவுண்ட்டில் நிலையாக வைத்திருக்க வேண்டிய மினிமம் பேலன்ஸ் தொகை வேறுபடும். இந்த மினிமம் பேலன்ஸ் தொகை நிபந்தனையால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிந்தும் ரிசர்வ் வங்கி இதற்கு செவிசாய்க்க மறுத்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவின் முக்கியமான தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ (ICICI Bank) மினிமம் பேலன்ஸ் (Minimum Balance) தொகையை ரூ.10,000 ல் லிருந்து ரூ.50,000 ஆக அதிரடியாக உயர்த்தியிருந்தது.
மினிமம் பேலன்ஸ் தொகை எவ்வளவு குறைப்பு?
ஐசிசிஐயின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நிதித்துறை வல்லுனர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மினிமம் பேலன்ஸ் தொகையை உடனடியாக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கி மினிமம் பேலன்ஸ் தொகையை ரூ.50,000 ல் இருந்து ரூ.15,000 ஆக குறைத்துள்ளது.