மாதச் சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்கான நிதியைத் திரட்டுவது எப்படி? அவர்கள் SIP முறையில் குறிப்பிட்ட தொகையை மாதம்தோறும் முதலீடு செய்தால் 5 கோடி ரூபாய் ஓய்வூதிய நிதியைச் சேர்க்கலாம்.
பணி ஓய்வுக்குப் பிறகு நிதிச் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்பது அனைவருடைய விரும்பமாகவும் உள்ளது. மாதச் சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்கான நிதியைத் திரட்டுவதற்கு குறிப்பிட்ட தொகையை மாதம்தோறும் முதலீடு செய்ய வேண்டும்.
29
Rs.10,000 SIPs
SIP முறையைப் பின்பற்றி ஒரு குறிப்பிட்ட தொகையை தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், பணி ஓய்வுபெறும்போது ஒரு பெரிய தொகை உங்கள் கைக்குக் கிடைக்கும். இந்த முறையில் 5 கோடி ரூபாய் ஓய்வூதிய நிதியைச் சேர்ப்பது எப்படி என்பதை இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
39
5 crore retirement corpus
எடுத்துக்காட்டுக்காக, 39 வயதாகும் ஊழியர் ஒருவர் இப்போது மாதம் 50,00 ரூபாய் சம்பளம் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது குடும்பத்தின் மாதாந்திர தேவைகளுக்கான ரூ.30,000 வரை செலவாகிறது. எஞ்சிய தொகையில் ரூ.10,000 ரூபாயை அவர் SIP முறையில் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார். எனில் அவர் எப்படி முதலீடு செய்யலாம்?
49
SIP retirement planning
மாதந்தோறும் ரூ.10,000 முதலீட்டுடன் SIP திட்டத்தைத் தொடங்கலாம். இதற்கு ஆண்டுதோறும் 12% வருமானம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். இந்த முதலீட்டை மாதம்தோறும் தொடர்ந்தால் 5 கோடி ரூபாய் இலக்கை எட்ட சுமார் 33 ஆண்டுகள் ஆகும். அதாவது, 27 வயதிலிருந்து முதலீடு செய்யத் தொடங்கினால் 60 வயதில் 5 கோடி ரூபாய் நிதி அவரிடம் இருக்கும்.
59
SIP Calculator
இலக்கை இன்னும் விரைவாக எட்டுவதற்கு SIP முதலீட்டை ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரிக்க வேண்டும். இதிலிருந்து 12% வருமானம் ஈட்டினால், ரூ.5 கோடி இலக்கை அடைய 26 ஆண்டுகள் ஆகும்.
69
SIP investment
ஆனால், சில அரிதான சூழ்நிலைகளில், இந்த முதலீட்டை 1-2 ஆண்டுகள் நீட்டிக்கவும் வேண்டியிருக்கும். உதாரணமாக, கோவிட்-19 பெருந்தொற்று பரவிய காலத்தில் சந்தைகள் 30%க்கு மேல் சரிவைச் சந்தித்தன. அப்படியான சமயங்களில் உங்கள் முதலீட்டுக் காலத்தை சற்று நீட்டிக்க வேண்டியிருக்கும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
79
5 crore corpus in 20 years
20 ஆண்டுகளில் ரூ. 5 கோடி கார்பஸ் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு மாதாந்திர SIP முதலீட்டை ரூ.25,000 இல் இருந்து தொடங்க வேண்டும். இதை ஆண்டுதோறும் 10% உயர்த்த வேண்டும். இதற்கு 12% வருமானம் கிடைப்பதாக வைத்துக்கொண்டால், 5 கோடி ரூபாயைப் பெற சுமார் 20 ஆண்டுகள் ஆகும்.
89
Invest In SIP
ஓராண்டு மாதம் 25,000 ரூபாய் முதலீடு செய்துவிட்டு, இரண்டாவது ஆண்டில் மாதாந்திர முதலீட்டை 10% அதிகரிக்க வேண்டும். அதாவது, மாதத்திற்கு ரூ.27,500 முதலீடு செய்ய வேண்டும். மூன்றாம் ஆண்டில், மாதாந்திர முதலீடு மீண்டும் 10% உயர்த்தப்பட்டால், ரூ.30,250 ஆகும். இவ்வாறு 20 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்
99
SIP retirement planning
இவ்வாறு தொடர்ந்து அதிகரிக்கும் SIP உத்தி, உங்கள் வருமானம் மற்றும் சேமிப்புத் திறன் வளருவதற்கு ஏற்பட முதலீட்டையும் படிப்படியாக அதிகரிக்க அனுமதிக்கிறது. காலப்போக்கில் உங்களுக்குக் கிடைக்கும் வருமானமும் அதிகரித்துக்கொண்டே வரும்.
(பொறுப்புத்துறப்பு: மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு முன் அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள். சந்தேகம் எழுந்தால் சந்தை நிபுணர்களை அணுகி ஆலோசனை பெறுலாம்.)