UPI கிரெடிட் லைன் மூலம் ஈசியா கடன் கிடைக்கும்! ஆர்பிஐ கொண்டுவரும் சூப்பர் வசதி!

Published : Dec 10, 2024, 05:09 PM ISTUpdated : Dec 10, 2024, 05:28 PM IST

UPI Credit Line: ரிசர்வ் வங்கி UPI மூலம் முன்அனுமதி பெற்ற கடன்களை வழங்க அனுமதி அளித்துள்ளது. இது கிராமப்புற மக்கள், சிறுதொழில் செய்பவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு கடன் பெறுவதை எளிதாக்கும். இந்த வழிமுறை ரொக்கப் பணம் இல்லாத பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்.

PREV
15
UPI கிரெடிட் லைன் மூலம் ஈசியா கடன் கிடைக்கும்! ஆர்பிஐ கொண்டுவரும் சூப்பர் வசதி!
UPI Credit Line

ரிசர்வ் வங்கி UPI மூலம் பெறும் வசதியைக் கொண்டுவந்துள்ளது. சிறு நிதி வங்கிகள் இந்த வசதியைப் பயன்படுத்தி முன்அனுமதி பெற்ற கடன்களை வழங்கலாம் என ஆர்பிஐ அனுமதி கொடுத்திருக்கிறது. இதன் மூலம்

25
UPI (Unified Payment Interface) Loans

கிராம்ப் புறங்களில் உள்ளவர்கள் கடன் பெற இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சிறுதொழில் செய்பவர்கள், தொழில்முனைவோர், தனிநபர்கள் கடன் பெறுவது எளிதாக இருக்கும் எனவும் ஆர்பிஐ கருதுகிறது. இந்த வழிமுறை ரொக்கப் பணம் இல்லாத பொருளாதாரம் என்ற இலக்கிற்கு ஊக்கம் தருவதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

35
Small Finance Banks Pre-sanctioned credit

UPI முறையில் முன் அனுமதி பெற்ற கிரெடிட் லைன்கள் UPI செயலிகள் மூலம் நேரடியாக கடன் பெற உதவும். கிரெடிட் லைன், ஓவர் டிராஃப்ட், சில்லறை கடன்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கவும் இந்த வசதி பயனுள்ளது. இதனால் கடன் சார்ந்த நிதி பரிவர்த்தனைகள் தங்குதடையின்றி சுலபமாக நடக்கும்.

45
Credit line on UPI

இந்த வசதியை பயன்படுத்து எவ்வளவு கடன் பெறலாம் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த சேவைக்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அப்போது, இந்த வழிமுறையை பயன்படுத்துவதற்கான வரம்புகள் மற்றும் நிபந்தனைகள் பற்றியும் அப்போது தெரியவரலாம்.

55
UPI Lite Limit increased

அண்மையில் UPI Lite சேவையில் ஒரு பரிவத்தனைக்கான வரம்பை 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதேபோல UPI லைட்டில் அதிகபட்ச பேலன்ஸ் வரம்பு 2,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories