30% க்கு மேல் ரிட்டன் கொடுத்த மியூச்சவல் ஃபண்டுகள்! ஜாக்பாட் அடித்த முதலீட்டாளர்கள்!

Published : Dec 10, 2024, 06:15 PM ISTUpdated : Dec 10, 2024, 08:17 PM IST

2024 ஆம் ஆண்டில் சுமார் 10 ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு 30% க்கு மேல் லாபத்தை வழங்கியுள்ளன. இவற்றில் குறிப்பிட்ட சில மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
30% க்கு மேல் ரிட்டன் கொடுத்த மியூச்சவல் ஃபண்டுகள்! ஜாக்பாட் அடித்த முதலீட்டாளர்கள்!
Small Cap Mutual Funds 2024

2024ஆம் ஆண்டில் நான்கு ஸ்மால்கேப் ஃபண்டுகள் 40% க்கும் மேல் வருவாயை வழங்கியுள்ளன. பட்டியலில் முதலிடத்தில் உள்ள பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட் 2024ல் 47.73% வருமானத்தை வழங்கியது. மோதிலால் ஓஸ்வால் ஸ்மால் கேப் ஃபண்ட் மற்றும் எல்ஐசி எம்எஃப் ஸ்மால் கேப் ஃபண்ட் ஆகியவை முறையே 46.89% மற்றும் 41.82% வருமானத்தை அளித்தன.

25
Mutual funds in 2024

இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் 2024 இல் 40.43% வருமானத்தை வழங்கியது. ஐடிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் 2024 இல் 38.11% வருவாயை வழங்கியது. அதைத் தொடர்ந்து டாடா ஸ்மால் கேப் ஃபண்ட் மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் ஆகியவை முறையே 36.04% மற்றும் 35.77% வருமானத்தை அளித்தன.

35
Small cap funds performance in 2024

மஹிந்திரா மேனுலைஃப் ஸ்மால் கேப் ஃபண்ட் 2024 இல் 32.20% வருமானத்தைக் கொடுத்தது. மிகப்பெரிய ஸ்மால்கேப் ஃபண்டான நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் 2024 இல் 30.39% வருமானத்தை வழங்கியது.

45
Mutual Funds with high returns

2024 இல் கோடக் ஸ்மால் கேப் ஃபண்ட் மற்றும் ஆக்சிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் முறையே 29.08% மற்றும் 28.43% வருமானத்தை அளித்தன. குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் 2024ஆம் ஆண்டில் 28.34% வருமானத்தை வழங்கியது. ஃபிராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் காஸ் ஃபண்ட் 26.31% வருமானத்தைத் தந்துள்ளது.

55
Best small cap mutual funds in 2024

ஐசிஐசிஐ ப்ரூ ஸ்மால்கேப் ஃபண்ட் மற்றும் குவாண்டம் ஸ்மால் கேப் ஃபண்ட் ஆகியவை ஒரே நேரத்தில் முறையே 19.69% மற்றும் 18.96% வருமானத்தை வழங்குகின்றன.

பைசா வசூல் புத்தாண்டு! 2025ஆம் ஆண்டில் லாபத்துக்கு கேரண்டி உள்ள பங்குகள்!

Read more Photos on
click me!

Recommended Stories